உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின்

"சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட்" - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‛‛ சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான ‛நீட்' தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‛நீட்' தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள், அதன் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு நாம் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை ‛நீட்' பறிக்கிறது.தேசிய தேர்வு முகமையை, மத்திய கல்வித்துறை அமைச்சர் பாதுகாக்கும் போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வேறு மாதிரியான காட்சிகளை காட்டுகிறது. நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகுதியின் அளவாக கருதப்படும் நீட் தேர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் தன்னை வெளிப்படுத்தி உள்ளது. மாணவர் விரோத, சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Swaminathan L
ஜூன் 19, 2024 15:22

கேள்வி முறையை மாற்றி அமைத்தால் சரியான பதில் தெரிவு செய்ய முடியாத நிலையில் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவ மாணவியர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கல்வி கற்கும் முறையில் அல்லவா குறை இருக்கிறது? ஸ்டேட் போர்டு நடத்தும் பள்ளி இறுதித் தேர்வில் மதிப்பெண்களை அள்ளும் மாணவ மாணவியர்கள் நீட் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் மிகக் குறைவாக எடுக்கக் காரணம், 1 கேள்விகள் புரியவில்லையா 2 சிலபஸ் மாறுபாடுகளா? மனப்பாடம் செய்து எழுதும் முறை நீட் தேர்வில் செல்லுபடியாகவில்லையா? பள்ளியிறுதித் தேர்வில் ஏகப்பட்ட மதிப்பெண்களை அள்ளி அண்ணா பல்கலைக் கழக நிர்வாகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த முதல் வருடத்திலேயே நிறைய பாடங்களில் அரியர் வைக்கும் அவலம் மாணவ மாணவியருக்கு எதனால் ஏற்படுகிறது?


S.V.Srinivasan
ஜூன் 19, 2024 12:10

நீட்டுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் முக்கிய மந்திரி அவர்களே.


Selvaraj
ஜூன் 19, 2024 09:17

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது அல்ல. தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒரு அட்மிஷனுக்கு கோடி கோடியாக வசூல் செய்வதற்குத் தான் எதிரானது..


Selvaraj
ஜூன் 19, 2024 09:13

ஏழைகளுக்கு எதிரானது அல்ல நீட் தேர்வு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒரு அட்மிஷனுக்கு கோடி கோடியாக வசூல் செய்வதற்குத் தான் எதிரானது.


Pattabiraman Vengeteraman
ஜூன் 18, 2024 20:03

As long as Stalin enjoys the support of voters he will utter nonsense. There is no point in blaming him. Every election gives him the strength and the arrogance to do anything.


S.V.Srinivasan
ஜூன் 19, 2024 12:11

100% TRUE


tmranganathan
ஜூன் 18, 2024 18:53

உங்கப்பன் டிவிஎஸ் பஸ்களை தேச உடமையாக்குதவுபோல், ங்கட்சிக்காரன் நடத்தும் மருத்துவ கல்லூரிகளை நாட்டுடைமையாக்கு அப்புறம் சமூக நீதிபற்றி பேசலாம்


rama adhavan
ஜூன் 18, 2024 18:41

அதாவது தனியார் மருத்துவக் கல்லூரி நடத்துபவர்கள் ஏழைகள். அவர்கள் கட்டணக் கொள்ளை நடத்துவது சமூக நீதியா? இது போன்ற அறிக்கையை ஒதுக்க வேண்டும்.


Muralidharan raghavan
ஜூன் 18, 2024 11:00

நீட் மருத்துவ கல்லூரியை நடத்துபவர்களுக்கு எதிரானது. மாணவ மாணவிகளுக்கு ஆதரவானது. சமூக நீதி காப்பது


Chitra R (Work holic)
ஜூன் 18, 2024 07:14

In Chennai Stalin jimismanagement is huge. He is not bothered about the loitering cows and buffalos. As a result accident happen and public life is already jeopardized.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 18, 2024 01:46

இன்னமும் வாய்கூசாமல் பொய் பேச காரணம், தமிழக அறிவாளி ஹிந்துக்கள் இந்த கோவில் இடிப்பு , மணல் கனிமவல திருடனுக்கு 500 , 1000 வாங்கிக்கொடு வோட்டை போட்டதுதான். ஏன் குடும்பத்திலேயே மூவர் நீட் மூலமாக 44.000 செலுத்தி படித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை