உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசு விருது

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசு விருது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்திற்கு ஐ.நா., விருது; உணவு பாதுகாப்புத் துறைக்கு, மத்திய அரசு விருது என, இரண்டு விருதுகளை, மக்கள் நல்வாழ்வு துறை பெற்றுள்ளது.தமிழகத்தில், 2021 ஆகஸ்ட், 5ல், மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு, தொற்றா நோய்க்கான மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. அத்துடன், இயன்முறை சிகிச்சை, நோய் ஆதரவு சிகிச்சை, 'டயாலிஸிஸ் பேக்' போன்றவையும் வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தில், 4.23 கோடி பேர் தொடர் சேவை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில், கடந்த செப்டம்பரில் நடந்த, 79வது ஐ.நா., பொது சபையின், 'லெவன்த் பிரண்ட்ஸ் ஆப் தி டாஸ்க் போர்ஸ்' கூட்டத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு விருது வழங்கப்பட்டது.அதேபோல, டில்லியில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 2023 - 24ம் ஆண்டுக்கான, மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டிற்கான செயல்பாட்டில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து விருது பெற்றது.இரண்டு விருதுகளையும், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
நவ 09, 2024 10:23

மக்களை தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று மக்களை தேடி பல வியாதிகள்தான் முன்னே செல்கின்றன


sankar
நவ 09, 2024 09:30

கண்ணுக்கு புலப்படாத ஒன்றுக்கு விருது - பேப்பறில் மட்டுமே,- இதிலும் விஞ்ஞாந ஊழல் விளையாடுது


ஆரூர் ரங்
நவ 09, 2024 08:48

உண்மையில் அது யுனெஸ்கோவா இருக்கலாம் .


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 08:42

இந்த மக்களைத்தேடி மருத்துவம் எந்த ஊருல நடக்குதுன்னு தினமலர் கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாமே. கேள்விப்படாத ஒண்ணா இருக்குது. அடுத்து மெய்யாலுமே ஐ நா விருதா இல்லே கென்டக்கி கே எஃப் சி டாக்டர் பட்டம் மாதிரியா?


கனோஜ் ஆங்ரே
நவ 09, 2024 14:00

மருத்துவ வசதி பெற இயலாத பட்டித்தொட்டி, குக்கிராமங்களில் அனைத்திலும் மக்களை தேடி மருத்துவ சேவை தொடர்கிறது... நீங்க ஹார்ட் ஆப் சிட்டியான சென்னை அண்ணா நகர், 12வது மெயின் ரோடில் அமர்ந்து கொண்டு... எந்த ஊரு...? கேட்டா... இது ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்திற்கான திட்டம். இதுலயும் உள்ளே நுழைஞ்சு பயனடையலாம்னு பார்க்குறீங்களா... விட்டா, மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் உங்க இல்லத்தரசிக்கு வேணும்..னு கேப்பீங்க போலிருக்கே....?


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 16:39

கனோஜ் ஆங்ரே, அவர்களே, உங்கள் பெயரைப்பார்த்ததும் நீங்கள் ஏதோ வடகிழக்கு மாநிலங்களில் கழகப் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். சென்னை அண்ணா நகர் பன்னிரண்டாவது பிரதான சாலையில்தான இருக்கிறீர்களா? வளர்க உமது கழகப்பணி


அப்பாவி
நவ 09, 2024 07:06

ஐயய்யோ... இது . ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டாரு.


Smba
நவ 09, 2024 06:55

எங்க பகுதிக்கு எல்லாம் யாருமே எட்டி பாத்தது இல்ல விருது தாவது விருந்தாவது நாடகம்


INDIAN
நவ 09, 2024 06:48

மக்களைத்தேடி மருத்துவத்திட்டத்துக்கு மத்திய அரசு விருது என்று தலைப்பிட்டுள்ளீர்கள் , ஆனால் விரிவான செய்தியில் அது ஐ நா சபை விருது என்று செய்தியிருக்கிறது , இது தெரியாமல் நடந்ததா? அல்லது ஐ நா அறிவித்திருந்தாலும் அதை அறிவிக்க உங்களுக்கு மனமில்லையா? செய்தியை செய்தியாக போடுங்கள் , அரசியலுக்கு நிறைய தலைப்புகள் இருக்கு , வாசகரின் ஈமெயில் கடிதம் என்ற பெயரில் யாரவது இதையும் திட்டி மெயில் வரும் அதை பிரசுரியுங்கள்


sankar
நவ 09, 2024 11:20

உண்மையில் உங்களை தேடி வந்ததா அரசின் மருத்துவம் - அல்லது இருநூறு வந்ததா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை