உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சுரங்க அனுமதிக்கு தனித்தனி ஆய்வு கூடாது மத்திய அரசு உத்தரவு

 சுரங்க அனுமதிக்கு தனித்தனி ஆய்வு கூடாது மத்திய அரசு உத்தரவு

சென்னை: சுரங்க அனுமதி கோரும் இடத்தை, வனத் துறையினர், கனிமவளத் துறையினர் கூட்டாக ஒரே சமயத்தில் ஆய்வு செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்களை தோண்டி எடுப்பதற்கான சுரங்க பணிகள் நடக்கின்றன. எந்தெந்த இடங்களில், என்ன வகை கனிமங்கள் கிடைக்கும் என்பது குறித்த ஆய்வுகள், புவியியல் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும். இதில் தெரியவந்த முடிவுகள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கனிமங்களை எடுக்க, மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும். இதுபோன்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட இடங்களை, கனிமவளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கின்றனர். அதன்பின், வனத் துறை அதிகாரிகள் தனியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கின்றனர். இதுபோன்ற விஷயங்களில், அரசு துறைகள் தனித்தனியாக ஆய்வு செய்வதால், பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, சுரங்க பணிக்கான அனுமதி அளிக்கும்போது, கனிம வளத்துறையும், வனத்துறையும் இணைந்து கூட்டாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, தமிழகம் உட்பட அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை