மேலும் செய்திகள்
த.வெ.க.,வுக்கு பா.ஜ., கேள்வி
8 minutes ago
தேர்தல் அறிக்கை தயாரிக்க அ.தி.மு.க.,வில் குழு அமைப்பு
8 minutes ago
பொங்கல் பரிசு தொகையால் ஓட்டு மதிப்பு கூடுகிறது
10 minutes ago
தி.மு.க., நன்றி மறக்க கூடாது
11 minutes ago
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குளிர் காற்று காரணமாக, தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது. நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிகாலை வேளையில் உறைப்பணி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
8 minutes ago
8 minutes ago
10 minutes ago
11 minutes ago