உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - குருவாயூர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை:சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் வரும் 27ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை நாகர்கோவிலுக்கு செல்லாமல், நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே ரயில் இரட்டை பாதை பணி நடந்து வருகிறது.இதனால், இந்த தடத்தில் செல்ல வேண்டிய பயணியர், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில், சென்னை எழும்பூர் - குருவாயூர் செல்லும் குருவாயூர் விரைவு ரயில், வரும் 27ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை, இரு மார்க்கத்திலும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு செல்லாது. நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ