உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேஜஸ் உட்பட 15 ரயில்களின் சேவையில் மாற்றம்

தேஜஸ் உட்பட 15 ரயில்களின் சேவையில் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை - மதுரை தேஜஸ் உட்பட, 15 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் செல்லும், சில ரயில்களின் சேவையில், தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன் விபரம்: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rxy5089n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில், வரும் 4, 7, 9, 11ம் தேதிகளில், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லாது  நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி விரைவு ரயில், 9ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும் குருவாயூர் - எழும்பூர் விரைவு ரயில், 3, 6, 8, 10ம் தேதிகளில் புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்லும் நாகர்கோவில் - கோவை விரைவு ரயில், 4, 7, 9, 11ம் தேதிகளில், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்வதால், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது இதேபோல், கன்னியாகுமரி - ஹவுரா, நாகர்கோவில் - காச்சிக்குடா, மயிலாடுதுறை - செங்கோட்டை, பனாரஸ் - கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பகுதி ரத்து

 எழும்பூர் - மதுரை தேஜஸ் ரயில், 7, 11ம் தேதிகளில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் ஓக்ஹா - மதுரை இரவு 10:00 சிறப்பு ரயில், வரும் 6ம் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும்  ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி விரைவு ரயில், இன்றும், 6ம் தேதியும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் மதுரை - எழும்பூர் மாலை 3:00 மணி தேஜஸ் ரயில், வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து இயக்கப்படும் செங்கோட்டை - ஈரோடு அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 7ம் தேதி கரூரில் இருந்து இயக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R K Raman
ஜன 03, 2025 06:47

எல்லாம் சரி. விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டைப் பாதை எப்போது? ஏன் இந்தப் பகுதி சட்டமன்ற மக்களவை உறுப்பினர்கள் ஏதும் செய்யவில்லை?


C S K
ஜன 03, 2025 08:18

எப்படி செய்வார்கள். அவர்கள் சொந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவே நேரம் போதவில்லையே


புதிய வீடியோ