உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு

ரயில்களில் கூடுதல் சுமைகளுக்கு கட்டணம்; தெற்கு ரயில்வே புது அறிவிப்பு

சென்னை: ரயில்களில் கூடுதலாக லக்கேஜ்கள் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயிலில் பயணம் செய்யும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயிலில் ஏறும் போதும் லக்கேஜ்களையும் எடுத்து செல்வது வழக்கம். ரயில்களில் கூடுதலாக லக்கேஜ்கள் எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து சமூக வலைதளத்தில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: * 10 முதல் 15 கிலோ லக்கேஜ்களை கூடுதலாக கொண்டு செல்ல 1.5 மடங்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும்.* படுக்கை வசதி கொண்ட ரயிலில் பயணிப்போர் நபர் ஒன்றுக்கு 40 கிலோ லக்கேஜ்களை கொண்டு செல்லலாம்.* ஏசி 2 டயரில் 50 கிலோவும், ஏசி முதல் வகுப்பில் பயணிப்போர் 70 கிலோ லக்கேஜ் எடுத்து செல்லாம்.இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரயில்வே சில பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. வெடிபொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள், ரசாயன மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பிடிபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம். அதேபோல் அதிக லக்கேஜ் எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 13, 2025 20:58

AC Chair Car no luggage allowed?


rama adhavan
ஏப் 13, 2025 18:35

எப்படி யாருடைய பொருள் என கண்டு பிடிப்பார்கள்? எப்படி எடை போடுவார்கள்? எப்படி வசூல் செய்வார்கள்? முடியவே முடியாத செயல். ஸ்லீப்பர் பெட்டிகளில் 100 பேர் பயணம் செய்கின்றனர். அவர்களையே கட்டுப்பாடு செய்ய முடியவில்லை. ஆர் ஏ சி என்று முழு கட்டணம் இரண்டு பெயரிடம் வாங்கிக்கொண்டு ஓரு படுக்கை தருகின்றனர். இருவரும் தூங்க முடிவதில்லை. இதை எல்லாம் முதலில் சரி செய்யட்டும். பிறகு சுமைக்கு வரலாம்.


Ray
ஏப் 13, 2025 14:54

இதெல்லாம் காலங்காலமாக உள்ள சட்டம்தான். கூடுதல் சுமையை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறைதான் நீர்த்துப் போனது காரணம் - அக்கறையான ஆட்களில்லை, அதிகாரிகளில்லை.


Loganathan Kuttuva
ஏப் 13, 2025 13:47

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் எடுத்து செல்லும் சாப்பாடு வகைகளுக்கு இந்த சுமை கட்டணம் இல்லை .பேருந்துகளில் இந்த அளவு சாமான்கள் கொண்டு செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வார்கள் .


புதிய வீடியோ