வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கர்னாடகாவும் திருட்டு திராவிடம் தான்.
தமிழக அறிவாளி திராவிடர்களுக்கு நாட்டிற்கு மிக அவசியமான ஸ்டெரிலைட் தாமிர ஆலை மட்டுமே கண்களில் தெரியும், சாய பட்டறைகள், தோல் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் கண்களில் தெரியாது.
ஓசூர்: ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே செலவரப்பள்ளி அணை உள்ளது. அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 120 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி இருந்தது. அதேபோல் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 2,623 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 42.64 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 2,220 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கிருந்து நீர்வரத்து கெலவரப்பள்ளி அணைக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. கர்நாடக மாநில தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிக அளவில் அணைக்கு வந்ததால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீரால், அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரை பாலத்தை ரசாயன நுரை சூழ்ந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r12kct2c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு கிராமங்களுக்கு செல்கின்றனர். ஓசூர் தீயணைப்பு துறையினர் நுரைகளை அகற்ற விரைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருவி தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத் துறையினர் தெரிவித்தனர். ஆபத்தை உணராமல் தரைப்பாலம் பகுதியில், தேங்கியுள்ள ரசாயன நுரையுடன் இளைஞர்கள் விளையாடுவதும் செல்பி எடுப்பதுமாக உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்யும் போதெல்லாம் அம்மாநில தொழிற்சாலை கழிவுகள் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து அங்கிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரில் ரசாயன நுரை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி கர்நாடகா மற்றும் தமிழக அதிகாரிகள் கூட்டு குழுவினர் மத்திய அரசு அதிகாரியுடன் சென்று ஆய்வு செய்த போதும் ஆற்றில் ரசாயன நுரை கலப்பதை கர்நாடக அரசு இதுவரை தடுத்து நிறுத்தவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
கர்னாடகாவும் திருட்டு திராவிடம் தான்.
தமிழக அறிவாளி திராவிடர்களுக்கு நாட்டிற்கு மிக அவசியமான ஸ்டெரிலைட் தாமிர ஆலை மட்டுமே கண்களில் தெரியும், சாய பட்டறைகள், தோல் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் கண்களில் தெரியாது.