உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - திருச்சி நெடுஞ்சாலை அதிவேக 8 வழிச்சாலையாகிறது

சென்னை - திருச்சி நெடுஞ்சாலை அதிவேக 8 வழிச்சாலையாகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி:தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை - திருச்சி சாலை, தற்போது நான்குவழிச் சாலையாக உள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், சாதாரண நாட்களிலேயே இச்சாலையில் கடும் நெரிசல் நிலவி வருகிறது.இச்சாலையில் நெரிசல், விபத்து, உயிரிழப்புகளை தவிர்க்கவும், பயண நேரத்தை குறைக்கவும், தற்போதுள்ள நான்குவழி சாலையை, கிரீன் பீல்டு எக்ஸ்பிரஸ் வே எனப்படும் எட்டு வழி அதிவிரைவு சாலையாக மாற்ற, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமான நகாய் திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக சென்னை - திருச்சி இடையே 310 கி.மீ., துார பயண நேரம், 6 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த எட்டு வழிச்சாலை, சென்னை அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் இருந்து துவங்கும். அதற்கான பூர்வாங்க பணியாக, சாலை வளைவுகள், அதிக விபத்து ஏற்படும் பகுதிகள், கூடுதல் மேம்பாலங்கள், சாலைகள் அமைக்க நிலம் எடுப்பு போன்ற விபரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பின், இத்திட்டத்தை துவங்க விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நகாய் அதிகாரிகள் அனுப்ப உள்ளனர்.தமிழகத்தில் சென்னை - சேலம் அதி விரைவு சாலைக்கு அடுத்ததாக, சென்னை - திருச்சி அதிவிரைவு சாலை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்றும், 2025ம் ஆண்டு மத்தியில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

panneer selvam
அக் 20, 2024 15:46

Highway is the responsibility of Central government but laying the road in the town and villages is the responsibility of State . So take up the subject with your local councilor or MLA


ganapathy
அக் 20, 2024 12:51

மொதல்ல லாரிகள் அதிவிரைவு பாதையை ஆக்கிரமித்து செய்யும் அட்டூழியத்தை நிறுத்துப்பா


Ganesun Iyer
அக் 20, 2024 12:37

1 லைன் கமெண்ட் போட்டாலும், 9 லைன் போட்டாலும் கெடைக்கறது என்னவோ ₹200 தான், ஆனாலும் போட்டியில்லாம சம்பாதிக்கிறது வசதிதான்..


Rpalnivelu
அக் 20, 2024 11:03

திருட்டு த்ரவிஷன்களுக்கு வழி விட்ட ராசாஸி சமாதியை பாத்துட்டு வந்து சொல்லுங்க. பெங்களூரு சேலம் ஹை வேயில் பராமரிப்பின்றி அனாதையாக இருக்கு. யேறி வந்த ஏணியை எட்டி உதைத்து சாராய சாம்ராஜ்ஜியத்தை திறந்தவனின் சமாதியையும் போய் பாருங்க.


Elanthirai R
அக் 20, 2024 19:39

சாராய சாம்ராஜ்ஜியம் ஒரு இரவில் மாற்றிவிடலாம் பணமதிப்பிழப்பு போல ஆனால் அதை பற்றி வாய் திறக்க மனம் வருவதில்லை


ஆரூர் ரங்
அக் 20, 2024 10:36

இந்த GST நெடுஞ்சாலை மட்டும் விவசாய பூமியேயில்லை. வெறும் பாலைவனம். இப்படிக்கு எட்டு வழிச்சாலை போராளிகள். ஆனால் இதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை கழக ஆட்களுக்கு கொடுக்காவிட்டால் மட்டும் விவசாய நிலத்தில் சாலை விரிவாக்கம் வேண்டாம் என கிடுகிடு போராட்டம் துவங்கும்.


Ramesh Trichy
அக் 20, 2024 10:20

In Gujarat, the Baroda to Ahmedabad high-speed road is already in place, significantly reducing travel time. A similar road is urgently needed for the Chennai to Trichy and Madurai stretch, which forms the backbone of Tamil Nadu. These roads will be well-controlled and fully secured. The responsibility for land acquisition lies with the Tamil Nadu government, and a special officer will be appointed to oversee the process and ensure the timely handover of land to the central government. All expenses related to the project will be covered by the central government.


Yasararafath
அக் 20, 2024 10:06

நெடுஞ்சாலையில் மட்டும் போட்டால் பத்தாது சந்து பொந்து தெருக்களில் சாலை போட வேண்டும்


Rpalnivelu
அக் 20, 2024 09:19

திருட்டு த்ரவிஷன்கள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. எல்லா மக்கள் பணத்தையும் சுருட்டி சாப்பிட்டு விடுவார்கள். ஊழலின் உச்சம் த்ரவிட மாடல் ஒரே வருடத்தில் 300000000000 கோடி ஸ்வாஹா


Saravanan RR
அக் 20, 2024 09:19

ஏற்கனவே இருக்கும் சாலைகள் பராமரிப்பே சரியாக இல்லை, சாலை மற்றும் பாலம் இணைப்பு மேடு பள்ளமாக இருக்கிறது..புதிதாக போடப்பட்டுள்ள மேம்பாலங்கள் ஸ்மூத்தாக இல்லை..பல்வேறு இடங்களில் குறுக்கு சாலை சந்திப்புகளும் சாலை தடுப்புகளும் மிகவும் இடைஞ்சலாக உள்ளன..கனரக வாகனங்கள் உரிய தடத்தில் செல்வதில்லை..இதை சரி செய்தாலே பயண நேரம் குறையும்.


தமிழ்வேள்
அக் 20, 2024 09:17

எட்டு வழியல்ல 80 வழி சாலை போட்டாலும் விபத்துகளை தவிக்க இயலாது..காரணம் நமது ஆட்களின் மட்டமான டிரைவிங் சாலை விதிகளை மதிக்காத தன்மை.. குறிப்பாக ரோடு ரேஜ் மற்றும் ஈகோ... தனிமனித ஒழுக்கம் சாலை பயன்பாட்டில் படிந்தால் தவிர இங்கு நல்லது எதுவுமே போக்குவரத்தில் நடக்காது.. நேதாஜியின் திட்டம் போல 50 அல்லது 80 ஆண்டுகளுக்கு இரும்பு திரைக்கு பின்னால் நாட்டை வைத்து மக்களுக்கு அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை முறையை கற்பித்தால் தவிர ஒழுங்கு என்பது குதிரை கொம்பு மட்டுமே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை