உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளுடன் நடந்த சென்ற தாயை முட்டித் தள்ளிய மாடு; பகீர் கிளப்பிய வீடியோ

மகளுடன் நடந்த சென்ற தாயை முட்டித் தள்ளிய மாடு; பகீர் கிளப்பிய வீடியோ

சென்னை: சென்னை அருகே மகளுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தாயை மாடு முட்டித் தள்ளிய வீடியோ பார்ப்போரை திகிலடைய வைத்துள்ளது.கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது மகளுடன் அங்குள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் மாடு ஒன்றும் சென்று கொண்டிருந்தது.மாட்டை பார்த்ததும் சந்றே மிரண்ட தாய், மகளை எதிர்திசையில் கைகளை பிடித்தவாறு அழைத்துச் சென்றார். அப்போது நொடிக்கும் குறைவான இடைவெளியில் மாடு சிறுமியை முட்டித் தள்ள எத்தனித்தது. மகளை காப்பாற்ற, தாய் முயற்சிக்க, அவரை மாடு முட்டியது. இதை கண்ட அங்குள்ளவர்கள், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு மாட்டை விரட்டி அடித்தனர்.இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ பகுதிக்குச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மாட்டை பிடித்தனர். மாட்டின் உரிமையாளர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

visu
மார் 15, 2025 20:53

பிடிக்கும் மாட்டுக்கு 10000 அபராதம் அதில் 5000 பிடிப்பவருக்கு என்று டெண்டர் விடுங்க வீட்டுல இருக்க மாட்ட கூட பிடிச்சுட்டு போய்டுவாங்க


Ramesh Sargam
மார் 15, 2025 20:31

அந்த கொளத்தூர் தொகுதி முதல்வர் ஸ்டாலின் தொகுதி அல்லவா? அங்கேயே இப்படி என்றால், சென்னையில் மற்ற தொகுதி நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.


sankaranarayanan
மார் 15, 2025 19:57

கொளத்தூர் தொகுதியில் இதெல்லாமே சகஜமப்பா இன்று மாடு முட்டும் நாளை மற்றொன்று முட்டும் பிறகு அரசே முட்டும் தொகுதி நாயகனாய் விளங்கும் அப்பாவை கேளுங்கள் மாடுகளை பிடிக்க என்ன ஏற்பாடு செய்துள்ளார் என்று


RAAJ68
மார் 15, 2025 14:45

மாடுகள் முட்டி எவ்வளவு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன அப்பவும் கூட சென்னை மாநகராட்சியினர் எத்தனை காட்டுகின்றனர். மாட்டுக்காரர்களுக்கும் சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்களுக்கும் புரிதல் உள்ளது மாடுகளை பிடிக்கக் கூடாது என்று மக்கள் சாகட்டும் பரவாயில்ல.


HoneyBee
மார் 15, 2025 14:33

அந்த மாட்டை‌ பிடிக்க தனிப்படை விரைந்தது. விரைவில் தனி நபர் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது.. அதில் ஒரு கோடியே பத்து ரூபாய் கமிஷன் அடிக்கப்பட்டது


MUTHU
மார் 15, 2025 21:21

இது சிரிப்புக்காக என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மரணத்தை விசாரித்த ஒரு நீதிபதி நீட்டிப்பு வாங்கி கொண்டு இருந்தார். அவர் விசாரித்த வழக்குகள் எப்படி விசாரிக்கப்பட்டிருக்கும் பாருங்கள்.


முக்கிய வீடியோ