உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.840 உயர்வு

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் ரூ.840 உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. நேற்று (பிப்.3) தங்கம் விலை இறங்கி இருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 அதிரடியாக அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ. 7,810 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.62,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த 5 நாட்களில்(ஜன.30 முதல் பிப்.3 வரை) நிலவிய தங்கம் விலை நிலவரம்;30/01/2025 - ரூ. 60,880 31/01/2025 - ரூ. 61,84001/02/2025 - ரூ.62,320 02/02/2025 - ரூ.62,320 03/02/2025 - ரூ. 61,640


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay D Ratnam
பிப் 04, 2025 14:44

சமீபத்தில் ஒரு பொருளாதார நிபுணர் அளித்த பேட்டியில் 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கம் ஒரு பவுன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டும் என்றார். அவ்வளவு காலம் தேவைப்படாது போல இருக்கிறது.


அப்பாவி
பிப் 04, 2025 10:24

நேத்திக்கி ட்ரம்பின் டாரிஃப் அறிவிப்புகளால் டாலர் மதிப்பு கூடி தங்கத்தின் விலை சரிந்தது. அதே ட்ரம்ப் இன்னிக்கி டாரிஃப்களை தற்காலிகமாக நிறுத்தியதால் டாலர் மதிப்பு குறைந்து தங்கம் விலை கூடியுள்கது. இதில் நம்ம கண்ட் ரோல் ஒண்ணுமில்லை.


சமீபத்திய செய்தி