உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பெயரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த ஜூலையில் கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து, கே.ஆர்.ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(செப்.,27) அவர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கிண்டி, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மும்பை பல்கலை., மற்றும் லண்டனில் சட்டம் படித்த ஸ்ரீராம், 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை துவங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை