உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெரிசலில் சிக்கி திணறியது சென்னை; வான் சாகசம் பார்க்க வந்தவர்கள் திண்டாட்டம்; 5 பேர் உயிரிழப்பு!

நெரிசலில் சிக்கி திணறியது சென்னை; வான் சாகசம் பார்க்க வந்தவர்கள் திண்டாட்டம்; 5 பேர் உயிரிழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள், நிகழ்ச்சி முடிந்ததும் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர். வெயில், நெரிசலில் சிக்கி தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இதன்மூலம், இந்தியாவில் அதிகப்படியான பார்வையாளர்கள் கண்டு ரசித்த நிகழ்ச்சி என்ற புதிய சாதனையை இது படைத்தது.விமானப் படையினரின் இந்த சாகச நிகழ்ச்சியைக் காண மெரினாவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துச் சென்றனர். இவ்வாறு வந்த மக்கள் அனைவரும், நிகழ்ச்சி முடிந்ததும், மொத்தமாக வீடு திரும்ப முற்பட்டதால் சென்னை சாலைகளில் கூட்டம் அலைமோதியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wu72y7g9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

5 பேர் உயிரிழப்பு

சாலைகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் ஸ்தம்பித்தன. மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் மயக்கம் அடைந்தனர். இதில் வெயிலில் சிக்கிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், 56, மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தொடர்ந்து திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன், 34, என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தினேஷ் குமார், 37, சீனிவாசன் என்பவரும், மற்றொருவர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும்( இவரின் விபரம் தெரியவில்லை) உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நெரிசலில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரமான பிறகும் சென்னை சாலைகளில் கூட்ட நெரிசல் குறைந்தபாடில்லை. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.சென்னையில் 21 ஆண்டுக்கு பிறகு வான் சாகச நிகழ்ச்சி நடந்தது; அதுவும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டு வந்து விட்டனர். அரசு இதை முன் கூட்டியே எதிர்பார்த்து போதிய போக்குவரத்து வசதிகளை செய்திருக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோரின் குமுறலாக உள்ளது.அது மட்டுமின்றி இந்த சாகசத்தை காண வந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ், ரயில் கிடைக்காமல், உரிய நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட மக்கள், சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவில் கூறியிருப்பதாவது: சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளும், அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.குடிநீர், உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை. ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் அரசு பஸ்களை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன!. இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். போலீசாருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதல்வராகத் தான் ஸ்டாலின் உள்ளார், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 07, 2024 09:51

தகுதியற்றவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த உயிர்பலிகளே சாட்சி. இவர்களுக்கு ஓட்டுப்போட்டு புத்தியில்லாத தமிழன் இன்னும் அனுபவிக்கட்டும். வாழ்த்துக்கள்.


வைகுண்டேஸ்வரன்
அக் 07, 2024 08:47

சென்னை மக்கள் எதுக்கெடுத்தாலும் புறப்பட்டு வந்து விட வேண்டியது. அரசு என்ன போக்குவரத்து வசதி செய்ய முடியும்? மெட்ரோ ரயில்கள், பஸ்கள், சாலைகள் எல்லாம் தான் இருக்கின்றன. கூடவே அவனவன் கார், பைக், ஸ்கூட்டர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஒரே இடத்துக்கு வந்து நின்று கொண்டிருந்தால்? நிகழ்ச்சி முடிந்ததும் ஒண்ணா எல்லாவனும் இடிச்சு தள்ளி முட்டி மோதிக்கிட்டு கச்சாமுச்சா ன்னு வண்டிய எடுக்கறது, நடக்கிறது என்று இருந்தால்? அரசால் என்ன தான் செய்ய முடியும்?? டிவி யில் பார்த்தால் போதாதா??


Yaro Oruvan
அக் 07, 2024 15:07

மக்களை குறை சொல்ரது ஓகே உப்பி.. அதுக்குன்னு இந்த விடியா அரசு கையாலாகாத அரசுன்னு சொன்னா எதுக்கு மக்கள் மேல பாயிர??


பாமரன்
அக் 07, 2024 08:28

மிக மோசமான ஏற்பாடுகள்... கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் சேர்ந்த கூட்டம் எல்லாம் ஒரே நேரத்தில் வெளியேற நினைத்தால் என்ன நடக்கும்... அதுவும் கொளுத்தும் வெயிலில் என நிர்வாகம் கணிக்க தவறியது கேவலமான செயல்...


VENKATASUBRAMANIAN
அக் 07, 2024 08:00

துணை முதல்வர் எங்கே போனார் வாய்கிழிய பேசுவாரே.


raja
அக் 07, 2024 07:55

இறந்தவர்கள் குடும்பத்துக்கு ருவா 10 லட்சம் நிதி கொடுக்க அவங்க என்ன திருட்டு திராவிட உடன் பிறப்புகள் விற்ற கள்ள சாராயம் குடித்து இறந்தார்களா... விடியல் கேள்வி...


Sankare Eswar
அக் 07, 2024 07:37

இந்த திராவிட டொகுகளை நம்பி மக்கள் போனால் சாவுதான் மிஞ்சும்


Kasimani Baskaran
அக் 07, 2024 05:50

ஆங்காங்கு தண்ணீர் கூட விநியோகிக்கவில்லை, பொது மக்களும் பொறுப்பில்லாமல் கடும் வெயிலில் தண்ணீர் கூட கொண்டுவராமல் கையை வீசிக்கொண்டு வந்துவிட்டார்கள். மொத்தத்தில் மாநில அரசு எந்த ஏற்படுகளையும் சரியாக செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மெட்ரோவுக்கு நல்ல வருமானம்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 07, 2024 04:49

ஒரு அருமையான தேசபக்தியை மக்களின் மனதில் உருவேற்றும் ஒரு நிகழ்ச்சியை, திருட்டு திராவிட அரசு ஒரு சோக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது மிகவும் கேவலமாக இருக்கிறது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது? அரசு வழக்கம் போல 2 லட்சம் கொடுத்து கடமையை முடித்துக்கொள்வார்கள். கள்ளசாராயத்தில் இறந்திருந்தாலாவது 10 லட்சம் கிடைக்கும்.


Murugesan
அக் 06, 2024 23:48

அப்பாவி மக்கள் சாக காரணமான அயோக்கிய அரசியல்வாதிங்களை ஆண்டவா சீக்கிரமாக தண்டிக்கப்பட வேண்டும் ,திமுக திராவிட அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற ஊடகங்கள் நாசமாக போவானுங்க


Matt P
அக் 06, 2024 22:00

முதலமைச்சர் தான் களித்து கொண்டிருந்தார் என்றால் துணை முதலமைச்சராவது போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருக்கலாமே . அவரு ஒரு விளையாட்டு மந்திரியாக எங்கே விளையாடி கொண்டிருந்தாரோ .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை