உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சென்னை - மங்களூரு புதிய பார்சல் ரயில் டிச., 12ல் துவக்கம்

 சென்னை - மங்களூரு புதிய பார்சல் ரயில் டிச., 12ல் துவக்கம்

சென்னை: சென்னை ராயபுரத்தில் இருந்து கேரளா வழியாக, கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு, புதிய வாராந்திர பார்சல் ரயில் சேவை, வரும் டிச., 12ல் துவக்கப்படுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும் வகையில், புதிய பார்சல் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. மங்களூரு சென்ட்ரலில் இருந்து, டிச., 12ம் தேதி முதல், வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:30 மணிக்கு, இந்த பார்சல் ரயில் சென்னை ராயபுரம் வரும். ராயபுரத்தில் இருந்து வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:20 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் செல்லும். ஆடைகள், மோட்டார் உதிரிபாகங்கள், ஸ்டீல் பொருட்கள், மீன்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்ல வசதியாக இருக்கும். சேலம், ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், கோவை, கோழிக்கோடு, கண்ணுார் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தி, பொருட்களை ஏற்றி, இறக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை