உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட், 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்(மே25), நாளையும் (மே 26) அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரெட் அலர்ட் * கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்(மே25), நாளையும் (மே 26)அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. * திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.* திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.* திருநெல்வேலி, தென்காசி தேனி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.* திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் நாளை கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.* சென்னையில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மே 25, 2025 20:23

என்னப்பா தமிழக முதல்வர் மீண்டும் டெல்லி செல்லவேண்டுமா? எதற்கு? மழைவெள்ள நிவாரண நிதி கேட்கத்தான்?


குமரி குருவி
மே 25, 2025 16:26

நாங்க ஆரஞ்சு.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை