மேலும் செய்திகள்
திருத்தணி சுதந்திரா பள்ளி மாணவர்களின் படைப்புகள்
04-Feb-2025
சென்னை: சென்னை மெட்ரோ உதவி எண்கள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மெட்ரோ உதவி எண்கள் வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.ஏதேனும் புகார்கள் இருந்தால், cmrl.inஎன்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.தற்போது அந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.உதவி எண்கள் இப்போது செயல்படுகின்றன.ஏதேனும் புகார்களுக்கு, சி.எம்.ஆர்.எல் உதவி எண் - 1860 425 1515, பெண்கள் உதவி எண் - 155370 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிரமத்துக்கு மன்னிப்புக் கூறுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
04-Feb-2025