உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுதான்: கமிஷனர் அருண்

சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுதான்: கமிஷனர் அருண்

சென்னை: சென்னையில் பொதுமக்களுடன் காவலர்களும் சாதாரண உடையில் வலம் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி விவரம்; பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தியேட்டர்கள், வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்களுடன் மக்களாக காவல்துறையினர் மப்டியில் இருப்பார்கள்.சந்தேக நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அவர்கள் கண்காணிப்பர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் சீருடையுடன் இருப்பார்கள்.வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை போலீசில் போதை பொருள் ஒழிப்பு, ரவுடிகள் அட்டகாத்தை ஒழிப்பது என 3 பிரிவுகளை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுப்போம். இவ்வாறு கமிஷனர் அருண் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
மே 10, 2025 18:00

சென்னையில் பொதுமக்களுடன் காவலர்களும் சாதாரண உடையில் வலம் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார். இது முற்றிலும் தவறான ஆணை ஆளுங்கட்சியாளர்களே போலீசு போன்ற அதிகாரம் செய்து சாதாரண உடையில் மக்களை அடக்குவதற்கு முயல்வார்கள் இதை முளையிலேயே கண்டிக்க வேண்டும் இந்த ஆணையை உயர் நீதி மன்றமே தடுத்து நிறுத்த வேண்டும் போலீசுக்கு தங்களது உடையில் வேலை செய்வதைவிட வேறு என்ன வேலை இதற்காக உடை கொடுத்துள்ளார்கள் வீட்டில் தூங்குவதற்காகவா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை