உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை குடியிருப்பு பகுதிகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை குடியிருப்பு பகுதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் (நவ 30) நேற்று முதல் கனமழை கொட்டியது.. இதனால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக குறைந்த அளவு மாநகர பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் வெள்ளம் காரணமாக. பல இடங்களில் பொதுப் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்பு பகுதிகள்

மேற்கு மாம்பலம், கொருக்கு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில இடங்களில் வீடுகளில் தரை தளத்தில் தண்ணீர் புகுந்தது.அடையாறு, சைதாப்பேட்டை, அரும்பாக்கம், ஷெனாய் நகர், எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, சூளைமேடு, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் மழைநீர் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.மின்சப்ளை துண்டிப்புமழை காரணமாக, ஆவடி சுற்று வட்டார பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ramani
டிச 01, 2024 07:01

திராவிட மாடல் ஆட்சியில் மழை நீர் பூமியில் விழுவதில்லை. மேலேயே பாதை மாறி மீண்டும் மேகத்திற்கே போய்விடுகின்றன


இறைவி
டிச 01, 2024 06:10

1 / 1 அதிக கன மழையோ ஒரு மணி நேரத்தில் 20 செமீக்கும் அதிகமாகவோ சென்னையில் மழை கொட்டி விடவில்லை. நிதானமாகவே பெய்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான சாலைகள், தரைவழி பாலங்கள் எல்லாம் மழை நேரில் முழுகி உள்ளன. அப்படியானால் 4000 கோடி ரூபாயில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டது எல்லாம் பொய்யா கோபால். இதுதான் யாரும் குறையே சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி. காசுக்கும் குவாட்டருக்கும் வெட்கமில்லாமல் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரையிலும், ஓட்டு சதவிகிதத்தை அதிகரிக்க ஆமாம் சாமி போடும் கட்சிகளை வளைத்து வைத்து இருக்கும் வரையிலும் தீயமுகதான் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வரும். மக்கள் எப்போதும் போல சகதியில் உழலும் ஜீவன்களாக சந்தோஷத்தை அனுபவிப்போம். இதுவரை கட்சி சார்பாக காசு கொடுத்தது போக இப்போது அரசு செலவிலேயே மகளிர் உரிமைதொகை என்ற பெயரில் மாதாந்திர காசு கொடுக்கிறார்கள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு வரி, மின்சார உயர்வு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நம்மிடம் பிடுங்குகிறார்கள். நாமும் பல்லிளித்து ஓட்டு போடுவோம்.


raja
டிச 01, 2024 03:53

நாலாயிரம் கோடி... போச்சு...


M Ramachandran
டிச 01, 2024 10:46

எங்கும் போக வில்லை. அது அயல்னாட்டில் வங்கிகளில் குட்டி போடாமல் தூங்குது.


raja
டிச 01, 2024 03:47

திருட்டு திராவிடர்களின் மாடல் ஆட்சியில் கொள்ளை அடிப்பது ஒன்றே குறிக்கோளாக எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத படி நடக்கிறது.,ஓட்டு போட்ட மக்கள் ஓசியில் எல்லாம் கிடைத்தால் போதும் என்றும் ஆண்கள் டாஸ்மாக் சரக்கு கிடைத்தால் போதும் என்று போதையில் கிடக்கிறான்..,என்று இதில் இருந்து தெளிந்து ஒன்கொள் கோவால் புற திருடர்களை அடித்து விரட்டுகிரார்கலோ அன்று தான் அவர்களுக்கு உண்மையான விடியல் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை