உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைநகரை தவிக்க வைக்கும் பெஞ்சல்! பறக்கும் ரயில் சேவை ரத்து!

தலைநகரை தவிக்க வைக்கும் பெஞ்சல்! பறக்கும் ரயில் சேவை ரத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து வருகிறது. மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை இன்னமும் ஓயவில்லை. முக்கிய பகுதிகளில் அடாது பெய்து வரும் மழையின் தீவிரம் நேரம் நகர, நகர அதிகமாகி வருகிறது. நகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளே தெரியாத நிலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளது. போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இருந்தாலும் பல பகுதிகளில் மழையால் கூடுதலாக தண்ணீர் தேங்கி வருகிறது. இந் நிலையில் சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை முதல் இயங்கி வந்த ரயில்சேவை தற்காலிகமாக நண்பகல் 12.15 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்றுடன் மழை கொட்டி வருவதால் ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மணிக்கு 70 கி.மீ., வேகத்துக்கு அதிகமாக காற்று வீசி வருவதால் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

புறநகர் ரயில்சேவை ரத்து

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், புறநகர் ரயில்சேவை ரத்து; ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வைகுண்டேஸ்வரன்
நவ 30, 2024 15:48

பறக்கும் ரயில் சேவை ரத்து என்று செய்தி போட்டு விட்டு, மெட்ரோ ரயிலின் போட்டோ போட்டிருக்கிறீர்களே.. ஒரே குழப்பமா இருக்கு


N Srinivasan
நவ 30, 2024 14:21

2015 மழையிலும் மாடி ரயில் நிறுத்தப்படவில்லை இப்போது ஏன் ? கொஞ்ச நாட்களாக சென்னை புறநகர் ரயில் சேவை தரம் மிகவும் குறைந்து விட்டது உதாரணம் இந்த செய்தி, தாம்பரம்-கடற்கரை ரயில் நிறுத்தங்கள். தீபாவளி முன் வந்த கடைசி ஞாயிறு நிறுத்தி மக்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது


சாண்டில்யன்
நவ 30, 2024 13:37

பறக்கும் ரயில் சேவை ரத்து என்று செய்தி போட்டு மெட்ரோ ரயில் படத்தை போட்டால் தினமலர் வாசகர்களுக்கு என்ன தெரிய போகிறது ஒன்றுமில்லை ஒன்றிய அரசு சேவையை ரத்து செய்தால் மாநில அரசின் மேல் பழியை போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்களோ


N Srinivasan
நவ 30, 2024 14:18

இதே போல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது என்று கூறி மாடி ரயில் படம் வந்தது இப்போது மாடி ரயிலும் நிறுத்தப்பட்டது என்ற அடுத்த செய்தி அரசு பண்ணும் குழப்பங்கள் போல உள்ளது


சாண்டில்யன்
நவ 30, 2024 15:15

சுபார்பன் ரயில்களை இயக்குவதால் லாபமில்லையென்பதால் ரயில்வேக்கு அவற்றை எப்போதெல்லாம் ஏதேதோ காரணங்காட்டி ரத்து செய்யலாம் என்பதிலேயே முனைப்பாக செயல் படுகிறார்கள் இந்த போக்கு சென்னைக்கு மட்டுமே இதுபோல மும்பையில் முடியாது பெருவெள்ளம் சூழ்ந்தபோதும் எப்படியாவது இயக்கவே முயல்வார்கள் கொல்கத்தா நிலைமையே வேறு ராஜதானி போன்ற ரயில்களுக்கும் இல்லாத முக்கியத்துவம் சுபர்பன் ரயில்களுக்கு தருவார்கள் குறித்த நேரத்துக்கு இயக்கப் படும் இல்லையேல் பிழைப்பு நாறிவிடும்


தமிழ்வேள்
நவ 30, 2024 16:48

சப்அர்பன் ரயில் கட்டணம் ஏற்றப்பட வேண்டும்.. தாம்பரம் மாம்பலம் ஐந்து ரூபாய்.. ஆனால் அதே தூரத்திற்கு மாநகர பஸ் கட்டணம் 34 ரூபாய்..௩௪ ரூபாய் தர முடிந்த பயணி குறைந்த பட்சம் 10 ரூபாய் ரயில் கட்டணம் தாங்க மாட்டாரா என்ன?..


Indian
நவ 30, 2024 13:26

புயல் , மழைக்கு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சிறப்பாக உள்ளன ..


சமீபத்திய செய்தி