உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம்: இபிஎஸ்

அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம்: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: '' அதிமுக -பாஜ கூட்டணி அமைத்ததை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. பயத்தில் உள்ளார், '' என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பேசினார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ' மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' பயணத்தில் இபிஎஸ் பேசியதாவது: தேர்தலுக்கு முன்பு அளித்த பல வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை. பாஜ உடன் இபிஎஸ் எப்படி கூட்டணி வைக்கலாம் என திமுகவினர் கேட்கின்றனர். அதிமுக நமது கட்சி. யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். இவர்களுக்கு ஏன் கசக்கிறது. ஏன் எரிச்சல் படுகின்றனர். அதிமுக -பாஜ கூட்டணி வைத்த அன்றே ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. பயம். 2026 தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி வெற்றி பெறும். 1999 ல் பாஜவுடன் திமுக கூட்டணி வைத்தது. அப்போது பாஜ என்ன கட்சி. நாடகம் போடுகின்றனர். மக்களை திசைதிருப்ப ஏதேதோ பேசி மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். ஸ்டாலின் எவ்வளவு அவதாரம் எடுத்து நாடகத்தை அரங்கேற்றினாலும், மக்கள் நம்பப்போவது இல்லை. சட்டசபை தேர்தலில் அதிமுக வரலாற்று ரீதியிலான வெற்றி பெறும்.நாங்கள் கடை வைத்து வியாபாரம் ஆகவில்லை எனச் சொல்கின்றனர். அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை போன்றது. மக்கள் செல்வாக்கு மிக்க கட்சி. உங்களைப்போன்று வீடு வீடாக சென்று கதவை தட்டி திமுகவில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல. வீடு வீடாக சென்று பிச்சை எடுத்த கட்சி ஏதும் உள்ளதா? திமுக தான் பிச்சை எடுக்கிறது. நம்மைப் பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.மக்களை ஏமாற்ற ஓரணியில் தமிழ்நாடு என பெயர்வைத்துள்ளனர். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். திமுகவினர் வந்து மொபைல் எண் கேட்டால் கொடுக்க வேண்டாம். அவர்கள் ஓட்டுக் கேட்க வரவில்லை. உங்கள் வீட்டில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ள மொபைல் எண் கேட்கின்றனர்.டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கின்றனர். அதன் மூலம் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். திமுக கார்ப்பரேட் கம்பெனி போல் உள்ளது. ஸ்டாலின் சேர்மன் ஆக உள்ளார். குடும்ப உறுப்பினர்கள் இயக்குநர்களாக உள்ளனர். உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது? கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதை வைத்து ஆட்சி செய்ய நினைக்கின்றனர்.தமிழகத்தை இவர்கள் மட்டுமா ஆட்சி செய்ய வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ராஜா
ஜூலை 25, 2025 22:57

அப்படி பயம் என்றால் அது ஜீ க்கு பயந்து போய் அவர் என்ன சொன்னாலும் அதன் படி ஒத்துக் கொண்டு மேசையின் அடியில் உருண்டு புரண்டு படுத்துக் கொள்வார்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 25, 2025 07:09

அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம் வருவது இருக்கட்டும், தமிழ் நாட்டுமக்கள் அதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய காத்திருக்கிறார்கள். மக்களின் வாக்குகளை வாங்க நீங்கள் தயாரா? முதலில் கூட்டணியை உறுதி செய்யுங்கள் ....ஒன்ற சேர்ந்து வாக்கு கேட்க செல்லுங்கள்.. 2026 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. உங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.. திமுகவிற்கு எப்போதும் மக்கள் செல்வாக்கு இருந்தது கிடையாது. ஆனால் அதன் கட்சி கட்டமைப்பு உறுதியானது, அதால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வை கடந்து இத்தனை நாள்கள் தாக்கு பிடிக்கிறது, இதை உணர்ந்து ..தேர்தலை சந்தியுங்கள் ..


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 25, 2025 00:29

கூட்டணி கட்சியோட காவிக் கொடி ஒண்ணத்தையும் காணாமே? ஐயோ பாவமே


Jack
ஜூலை 25, 2025 10:03

பச்சைக்கொடி தானே கண்ணுக்கு குளிர்ச்சியா தெரியும்


M Ramachandran
ஜூலை 24, 2025 23:59

உருப்படியா ஏதாவது பேசுங்கைய்யா.


Easwar Kamal
ஜூலை 24, 2025 23:55

எடப்பாடி அவர்களே இப்படியே மைண்டைன் பண்ணிக்கொண்டால் திராவிட மாடல் கூட்டங்களை ஒளித்து கட்டிவிடலாம். கண்டிப்பாக அமித் உதவி வேண்டும் இல்லாவிட்டால் இந்த திருட்டு த்ரவிட மாடல் கூட்டங்கள் ஒலிக்க முடியாது. நீங்கள் பிஜேபி அன்பு பொழிய பொழிய புள்ளைப்பூச்சி அப்போலோ விட்டு வெளியில வரக்கூடாது .


venugopal s
ஜூலை 24, 2025 23:04

இவருடன் கூட்டணி அமைத்து விட்டு பாஜகவினர் தான் இவர் எப்போது கழட்டி விடுவாரோ என்று பயந்து கொண்டு இருக்கின்றனர்!


Jack
ஜூலை 25, 2025 10:04

கழண்டுக்காம இறுக்கமா பிடிச்சுக்கோங்க


T.sthivinayagam
ஜூலை 24, 2025 21:14

போன சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் தானே கூட்டணி வைத்து இருந்து .இப்போது புதிதாக கூட்டணி வைத்து போல் பேசுகிறார் என்று மக்கள் கேட்கிறார்கள்


vivek
ஜூலை 25, 2025 09:03

அதுதானே.. நீ என்னைக்கு சொந்தமா கருத்து கேட்டிருக்கே.... எல்லாம் மக்கள் கேக்குறாங்க..


K.n. Dhasarathan
ஜூலை 24, 2025 21:01

ஈ.பி.ஸ். இன்று பரிதாபமாக கூவிக்கொண்டு, பேப்பர் பேடு கட்சியை கூட விடாமல், வாங்கோ வாங்கோ என்பதை பார்க்கும்போது பயம் யாருக்கு என்பது தெளிவாகிறது. அந்த பயத்தில் பிதற்றுவதுதான் கோயில் கல்லூரிகளை நடத்தலாமா என்பது ? இப்பவே இப்படியா இன்னும் காலம் இருக்குதய்யா ?


Narayanan Muthu
ஜூலை 24, 2025 20:18

புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் எம்மேல வந்து படுத்துக்குங்க என ஒரு பயந்தான்கொள்ளி கூப்பாடு போட்ட கதையா இருக்கு.


beindian
ஜூலை 24, 2025 20:15

எடப்பாடி : ஏங்கே எங்க கூட்டணிக்கு வாங்கோ, இந்தப்பக்கம் அமித்மமாஜி , அந்தப்பக்கம் விஸ்வகுரு மோடி , எங்கே,ஏங்கோ எங்க கூட்டணிக்கு வாங்கோ


முக்கிய வீடியோ