உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருதமலையில் மேம்பாட்டு பணி அடிக்கல் நாட்டினார் முதல்வர்

மருதமலையில் மேம்பாட்டு பணி அடிக்கல் நாட்டினார் முதல்வர்

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 33.63 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழைய படிக்கட்டுகளை சீரமைத்தல், ஆர்.சி.சி., மண்டபங்கள் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணி, அடிவாரத்தில் டிக்கெட் வழங்கும் அறை, பூஜை பொருட்கள் விற்பனை மையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி, பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி என, 33.63 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளை, காணொளி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். கோவிலில் நடந்த விழாவில், கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, கோவில் தக்கார் ஜெய குமார், கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை