உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்

எழுத்தறிவு திட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி முதல்வர் பெருமிதம்

சென்னை:எழுத்தறிவு பெறும் திட்டத்தில், 100 சதவீத தேர்ச்சி அடைந்து, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:முற்றிலும் எழுதப், படிக்கத் தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில், தமிழகத்தில் இருந்து பயின்ற, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத தேர்ச்சி பெற்று, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பணியாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ