உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.2,000

மழை நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.2,000

சென்னை : விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மழை நிவாரணமாக குடும்பத்துக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடு, மாடு, பயிருக்கும் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பெஞ்சல்' புயலால், பல மாவட்டங்களில், நவம்பர் 30ம் தேதி முதல் கனமழை பெய்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் இருந்தது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், குடியிருப்புகள், விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, பொன்முடி, பன்னீர்செல்வம், கணேசன் உள்ளிட்டோர் மழை பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு, சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார்.இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் தொடர்பாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு:விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்சேதமடைந்த குடிசைகளுக்கு, 10,000 ரூபாயும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டவும் முன்னுரிமை அளிக்கப்படும்மழையால், 33 சதவீதத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு, 2.47 ஏக்கருக்கு, 17,000 ரூபாய் வழங்கப்படும்பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்து இருப்பின், 2.47 ஏக்கருக்கு 22,500 ரூபாய் மழையால் பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்களுக்கு, 2.4 ஏக்கருக்கு 8,500 ரூபாய் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக 37,500 ரூபாய், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு 4,000, கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ரேஷன் கார்டு அடிப்படையில், தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, புதிய சான்றிதழ்களும், மாணவ - மாணவி யருக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்படும்நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தர்ம புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்களை, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஏக்கருக்கு ரூ.30,000

விவசாயிகள் எதிர்பார்ப்பு'புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்ச நேயலு வெளியிட்டுள்ள அறிக்கை:'பெஞ்சல்' புயல் மற்றும் மழையால் நெல் மட்டுமின்றி, காய்கறிகள், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பலவகை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 2.47 ஏக்கருக்கு, 17,000 ரூபாய் வழங்கினால், ஏக்கருக்கு 7,000 ரூபாய்க்கும் குறைவான நிவாரணம் தான் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சாகுபடிக்கு, 25,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதை கணக்கிட்டு பார்த்து, ஏக்கருக்கு, 30,000 வழங்கினால் மட்டுமே, விவசாயிகளால் மீண்டும் சாகுபடி செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாக்கெட்டில் 5 கிலோ அரிசி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு, 5 கிலோ பாக்கெட்டில் இலவச அரிசி வழங்குகிறது. இதற்காக, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு தலா 5 கிலோ எடையில், 75,000 பாக்கெட் அரிசி அனுப்பப்பட்டு உள்ளது. திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு, 75,000 பாக்கெட்டுகள் அனுப்பும் பணி நடக்கிறது.

முதல்வரிடம் விசாரித்த பிரதமர்

முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும், பிரதமரிடம் தெரிவித்தேன். மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள, புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கடிதம் எழுதி இருப்பதை தெரிவித்து, அதை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என, உறுதிபட நம்புகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் வாங்க ரேகை பதிவு கட்டாயமல்ல

தமிழக ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அனைத்து கடைகளுக்கும், 'பிரின்டர்' உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.'பெஞ்சல்' புயலால், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், 'கார்டு ஸ்கேன்' செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 18:10

//இவரை அப்படியே விழுப்புரம் பக்க்கம் பஸ் ஏத்தி விடுங்கப்பா//ஞாயிறு, திங்கள் முதல் விழுப்புரம் ல தான் இருக்கோம். மெடிக்கல் கேம்ப். சொந்த வண்டியில் வந்தோம். அரசு வாகனத்தில் அல்ல.


Ganapathy
டிச 04, 2024 16:37

ஐயா தாராளமனசு யாருக்கு வரும்? அடுத்தமழைக்கு இந்த 2000த்துல கட்டுன மாடமாளிகைகள் மழைல அடிச்சுகிட்டு போவும். அப்பவும் 2000தான் கொடுப்பாரு. ஏன்னா மக்கள் பணம் பாரு சூதானமா செலவு செய்யணும். வெள்ளத்துல அடிச்சுகிட்டு போனா 2000 ஆனா கள்ளச்சாராய சாவுன்னா 10 லட்சம். மக்களே பாத்துகுங்கபா இதான் திராவிட மாடலோட சூட்சுமம்.


ராமகிருஷ்ணன்
டிச 04, 2024 16:26

அடுத்த தேர்தலில் திமுக அதி பயங்கர தோல்வியை அடையும். எடப்பாடி முதல்வர், அண்ணாமலை துணை முதல்வர், கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 16:12

//"முதலில் நீ வாங்கும் 200 ரூபாயில் எவ்வளவு குடுபீர்கள்??"// இதே பத்திரிகை யில், பலமுறை எழுதி விட்டேன். எந்த கட்சியும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு காலணா தர மாட்டார்கள். ஏனெனில் அதைப் படித்து விட்டு யாரும் அந்த கட்சியை ஆதரிக்கப் போவதில்லை. மேலும் நடைமுறையில் இது சற்றும் சாத்தியமல்ல என்றும் எழுதிய பிறகும் ghee அதையே புடிச்சு தொங்குது. ஏன் தெரியல. நான் ஒன்றிய அரசின் ___ அமைச்சகத்தில் பணியாற்றுவதால், நான் வாங்குவது 200 அல்ல, மாதம் 200,000. அரசியல் கட்சிகளிலோ, அவர்களின் பேச்சு மேடைகளிலோ gezetted officers பங்கெடுக்கக் கூடாது என்பது விதி . வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நானும் நண்பர்களும் நிறைய செய்தோம். செய்து கொண்டிருக்கிறோம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 14:18

பேரும் ஊரும் இல்லாத ghee ஏன் இவ்ளோ அறிவிலியா இருக்கார்?? ஒன்றிய அரசு எவ்வளவு குடுத்தது என்றும், 4000 கோடி ரூபாய் எங்கே என்றும் என்னிடம் ஏன் கேட்கிறார்?? இங்கே நிறையப் பேருக்கு பொது அறிவுப் பாடம் சொல்லித்தர வேண்டும் போலிருக்கிறது. ஒன்றிய அரசு எவ்வளவு கொடுத்தது என்று பல அரசாங்க site களிலும் பத்திரிகைகளில் தேடியும் அறிந்து கொள்ள முடியவில்லை 4000 கோடி க்கு கணக்கு கேட்கிற அதிகாரம் பாஜக வின் CAG க்கு மட்டும் இருக்கிறது.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 12:55

கடந்த வெள்ளத்தின் போது உத்தரபிறதேசத்துக்கு எவ்வளவு நிவாரணத் தொகை தரப்பட்டது, குஜராத்துக்கு எத்தனை தரப்பட்டது என்று வாசகர்கள் இங்கே தெரியப்படுத்தினால் நல்லது. நிவாரணத் தொகை, இலவச பாய், போர்வை, மருந்துகள், உணவு, வெள்ளபாதிப்பு முகாம் எல்லாம், வெள்ளத்தால் ஒரு பாதிப்பும் வராமல், காரை பாலத்தின் மேல் நிறுத்தி விட்டு, apple போனில் கருத்து எழுதுபவர்களுக்கு தமாஷ், கிண்டல், அரசியல். என்ன செய்வது?? பரவாயில்லை. எழுதிக்கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு ஒரு சுகம். ஒரே ஒரு பக்கெட் தண்ணீரை உங்களின் சமையலறை அல்லது ஹாலில் ஊற்றுங்கள். பிறகு சுத்தம் செய்து பாருங்கள். வெள்ள பாதிப்பு கொஞ்சம் புரியும். எங்கே, ஒரு நாள் சம்பளத்தை, ஒரு நாள் விற்பனை லாபத்தை, நிவாரண நிதியாக கொடுங்கள் பார்க்கலாம்.


ghee
டிச 04, 2024 13:39

மத்திய அரசு கொடுத்ததில் எவளோ ஆட்டைய போட்டிங்க,4000 கோடி கணக்கு எங்கே.... உங்கள் பதில் தேவை....புருடா கதை வேண்டாம்


ghee
டிச 04, 2024 14:29

முதலில் நீ வாங்கும் 200 ரூபாயில் எவ்வளவு குடுபீர்கள்??


ghee
டிச 04, 2024 14:45

இவரை அப்படியே விழுப்புரம் பக்க்கம் பஸ் ஏத்தி விடுங்கப்பா. .


RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:45

கடந்த வெள்ளத்தின் போது உத்தரபிரதேசத்துக்கு எவ்வளவு நிவாரணத் தொகை தரப்பட்டது, ....... அறிவாளி சார் .... தமிழக மக்கள் திமுக / ஸ்டாலினுக்குத்தான் வாக்களித்துள்ளனர் .... பாஜக / யோகி ஆதித்யநாத் க்கு அல்ல ..... மினிமம் காமன்சென்ஸ், லாஜிக் உடன் கருத்து போடுங்கள் ..... தமிழகத்தைப்பற்றித்தான் தமிழர்களாக நாங்கள் கவலைப்பட முடியும் ...... உ பி பற்றி அல்ல ..... தவிர நம்முடையது திராவிடத்தால் முன்னேறிய மாநிலம் .... இங்கே அவலங்கள் கூடாது .....


Kanns
டிச 04, 2024 12:53

Except10% Real Genuine /Needy People, 90% Freebies are Lavishly Given Just for Votes. Recover Entire Amounts from Vote Hungry Ruling Parties


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 04, 2024 11:30

இந்த ரெண்டாயிரம் ஓவா வாங்கறதுக்குப் பதிலா ஒரு கிளாஸ் ஸ்ட்ராங்கா கள்ளக்குறிச்சி சரக்கு அடிச்சுட்டுப்போலாம்


orange தமிழன்
டிச 04, 2024 09:39

கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பத்து இலட்சம்.....ஆனால்......


Rafiq Ahamed
டிச 04, 2024 08:52

தமிநாட்டுக்கு திராவிட கட்சிகளே சிறந்தது 2026 தமிழக சட்ட சபை தேர்தலில் மீண்டும் திராவிட கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும்


Mettai* Tamil
டிச 04, 2024 10:27

தமிநாட்டுக்கு தேசிய கட்சிகளே சிறந்தது 2026 தமிழக சட்ட சபை தேர்தலில் தேசிய கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் ....


முக்கிய வீடியோ