உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.217 கோடியில் கோவில் கட்டுமானம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

ரூ.217 கோடியில் கோவில் கட்டுமானம்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநிலம் முழுதும், பல்வேறு கோவில்களின் கட்டுமானப் பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 86.7 கோடி ரூபாய் மதிப்பில் அன்னதானக் கூடம்; பூஜை பொருட்கள் விற்பனை நிலையம்; சுதை வேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில்; ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கும், தேர்வீதிக்கும் இணைப்புப்படி கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டம், குமாரவயலுார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 30.3 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக் கூடம், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் நீர்த்தேக்க தொட்டி, கழிப்பறைகள், குளியல் அறைகள், முடி காணிக்கை கூடம், அன்னதானக் கூடம் கட்டுதல், குளம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.பழனி தண்டாயுதபாணி கோவிலில் 14.5 கோடி ரூபாயில், கூடுதல் நிர்வாக கட்டடம்; திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், 12.3 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு நிலை ராஜகோபுரம், ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்டப்பட உள்ளது. இவை உட்பட, மொத்தமாக 217 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள 49 பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார். அத்துடன், உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வாளர் அலுவலகம் உட்பட, 21 கோடி ரூபாய் மதிப்பில், 16 கோவில்களில் திருமண மண்டபம், முடி காணிக்கை மண்டபம் உள்ளிட்ட கட்டடங்களை, முதல்வர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramalingam Shanmugam
ஜூன் 19, 2025 17:38

படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் தமிழனா இருப்பதில் வெட்கப்படணும்


Kulandai kannan
ஜூன் 19, 2025 11:05

சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களுக்கு கோவிலில் என்ன வேலை?


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 11:02

விரைவில் இந்த ஆலயங்களில் ஹிந்து நம்பிக்கைகளைப்பற்றி ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் அபத்தமாக கூறியவற்றை கல்வெட்டுக்களாக பதிப்பர்.


vbs manian
ஜூன் 19, 2025 09:25

கோவில் நிதிகளில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சி.


vbs manian
ஜூன் 19, 2025 09:24

கோவில் பணிகளில் மதசார்பற்ற ஒரு அரசு எப்படி ஈடுபட முடியும். சர்ச் மசூதி பணிகளில் ஏன் ஈடுபடவில்லை. அரசின் பணி நல்ல நிர்வாகம் தரமான சாலைகள் மருத்துவ வசதி கல்வி கூடங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது. கோவில் பராமரிப்பு நிர்வாகம் ஆன்மிகவாதிகள் கையில் இருக்க வேண்டும். நாத்திக வாதிகளின் ஆன்மிக பணி உயிர் இல்லா உடல்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 09:19

ஆர்டர் குடும்ப / பினாமி கம்பெனிக்குத்தானே ??


Suresh
ஜூன் 19, 2025 07:50

ஜனவரி மாதம் அருள் மிகு பழனி ஆண்டவர் தண்டாயுத பானி திருக்கோவில் வேலை வாய்ப்பு வெளி வந்து நிறைய பேர் அப்ளை செய்தனர் 6 மாதம் கடந்து விட்டது இது வரை நேர்காணல் நடைபெறவில்லை இதைப்போல் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவில் ராமேஸ்வரம் வேலை வாய்ப்பு வெளி வந்து 4 மாதம் ஆகி விட்டது இது வரை நேர்காணல் நடக்கவில்லை இது படித்த இளைங்கர்கள் மத்தியில் மன உளைச்சளை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இதை தமிழக அரசின் கவனத்திற்கு தங்களுது பேப்பர் வாயிலாக கொண்டு சென்று இதெற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் இதன் மூலம் பல பேர் வாழ்க்கைக்கு ஒரு நல் வழி காட்டுங்கள் இதை தங்களது பாதம் தொட்டு வேண்டி விரும்பி கேட்டு கொல்கிறேன்


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 07:38

யார் அப்பன் வீட்டு பணம். இந்துக்களின் உண்டியல் பணம் தானே செலவு செய்ய போரீங்க என்னமோ அரசின் பணம் மாதிரி பில்டப் தர்ரீங்க.


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 07:32

வெறுமனே துவக்கம் மட்டுமே நடக்கும். எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். இதுவும் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளதால் திமுக ஓட்டுகள் குறைந்து விடும் என்ற பயத்தால் மட்டுமே.


Bhaskaran
ஜூன் 19, 2025 07:13

நேற்று மருதமலை போயிருந்தேன் தரிசனம் முடிந்து திரும்பிவரும் வழி கரடு முரடான கற்கள் நிரம்பி உள்ளது குருவி கார்கள் பிச்சைக்காரர்கள் அதிகம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்


முக்கிய வீடியோ