உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

காரைக்குடி: காரைக்குடி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சாலையில் சுமார் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்தார்.தமிழக அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக சிவகங்கை வந்துள்ளார். இன்று காலை, காரைக்குடி அழகப்பா பல்கலை வளாகத்தில் கட்டப்பட்ட தமிழ் நூலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.பிறகு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து, தி.மு.க., கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய தனியார் திருமண மண்டபத்திற்கு கிளம்பினார். அப்போது, அழகப்பா பல்கலை வாயிலில் இருந்து கல்லூரிச் சாலை, தேவர் சிலை வழியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் தனியார் மஹால் வரை 4 கி. மீ., தூரம் நடந்து சென்றார். அப்போது, வழியில் நின்றிருந்த மக்களுடன் கைகுலுக்கிய அவர், அவர்கள் அளித்த பூங்கொத்துகளையும் பெற்றுக் கொண்டார். சிலர் முதல்வருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.Galleryவழியில் ஸ்டாலினை வரவேற்க பலர் காத்திருந்தனர். இதனால் வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், சில கி.மீ., தூரம் நடந்து சென்று, வழிநெடுகிலும் காத்திருந்த மக்களை சந்தித்தார். அவர்களுடன் கைகுலுக்கிய ஸ்டாலின், செல்பி எடுத்துக் கொண்டார். ஸ்டாலினுக்கு ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Matt P
ஜன 23, 2025 04:52

பிள்ளைகளெல்லாம் இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லலாமே. ஏன் கைய புடிச்சு குலுக்கணும்?


M Ramachandran
ஜன 22, 2025 17:26

கிழவியை கைது செய்து எதிர் கட்சிகளுக்கு நல்ல விளம்பரம்


நாஞ்சில் நாடோடி
ஜன 22, 2025 12:19

கபட வேட தாரி ...


M Ramachandran
ஜன 22, 2025 10:25

யப்பா பெரிய விஷயம் செய்திருக்கார்


MN JANAKIRAMAN
ஜன 22, 2025 09:09

மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள் ...ஏன் யாருமே புகார் மனு கொடுக்கவில்லை ?? ஒஹோ அனுமதி இல்லை தமிழகம் சுபிட்சமாக இருக்கிறது ???????????


Kali Raj
ஜன 22, 2025 09:06

நடந்தாலும் விழுந்தாலும் புரண்டாலும் 2026 ல் திமுக அவுட்.. மக்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.....


Kali Raj
ஜன 22, 2025 09:04

நடந்தாலும் விழுந்தாலும் புரண்டாலும்.....2026ல் திமுக அவுட்....மக்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்....


Matt P
ஜன 22, 2025 13:34

இப்படி தான் எப்போவும் சொல்கிறார்கள். மக்கள் கோபம் கொண்டுள்ளார்கள். போன தடவை கிடைத்தது குறைவு என்று கோபம் இருக்கலாம். 2026ல் அதிகம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கலாம்.


Rajasekar Jayaraman
ஜன 22, 2025 08:50

2026 நெருங்குது ப்போ திடீர்னு மக்களை சந்திச்சா இத்தனை ஆண்டுகளாய் எங்கே சுற்றுயணம் போனாயா என்று கேட்பார்கள் ஆகவே முன் எச்சரிக்கை எந்த வேடமிட்டாலும் எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் உன்னோடு திருட்டு திராவிடம் காலி.


ராமகிருஷ்ணன்
ஜன 22, 2025 07:27

வருகிற தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்று யாராவது இவரிடம் சொல்லி இருக்கலாம். அதான் தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்.


D.Ambujavalli
ஜன 22, 2025 06:22

கள்ளக்குறிச்சி, வேங்கைவயல் எல்லாம் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. அங்கெல்லாம் நடந்து போக மாட்டார்.


சமீபத்திய செய்தி