உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.300 கோடியில் 8 தளங்களுடன் நுாலகம் கோவையில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

ரூ.300 கோடியில் 8 தளங்களுடன் நுாலகம் கோவையில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

கோவை:கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாயில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டியதோடு, 2026ம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.தமிழக அரசின் 2024-25 பட்ஜெட்டில், கோவையில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், கோவை காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பில் மொத்தம் எட்டு தளங்களுடன் மாபெரும் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, கோவையில் நேற்று நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, அடிக்கல் நட்டு, பணியை துவக்கி வைத்தார். சிறப்புரை ஆற்றியபோது, 2026 ஜனவரியில் இம்மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.

ஈ.வெ.ரா., பெயரில் அமைவது ஏன்?

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சென்னையில் அண்ணா நுாற்றாண்டு நுாலகம் இருக்கிறது; மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு நுாலகம் இருக்கிறது; அவர்கள் இருவரையும் உருவாக்கிய ஈ.வெ.ரா., பெயரில் கோவையில் நுாலகமும், அறிவியல் மையமும் அமைவதே பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை