உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதியை நிறுத்தி வைத்து நெருக்கடி... புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

நிதியை நிறுத்தி வைத்து நெருக்கடி... புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழகத்திற்கு எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நிறுத்திவைப்பு

அனைவருக்கும் கல்வி (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி குறித்து நாளிதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழகம், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய திட்டமான சர்வ சிக்ஷா அபியானுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை.இதனால், பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டணம், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதன் காரணமாக, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் நிதி நெருக்கடியில் தவிக்கும் சூழல் உருவாகிறது. இதற்கு முக்கிய காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், இந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தாராளம்

அதேவேளையில், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே தராளமாக நிதி வழங்கப்படுகிறது.

தமிழகம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உள்ள 20 முக்கிய அம்சங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தமிழகம் 19 அம்சங்களிலும், மேற்கு வங்கம் 15 அம்சங்களிலும்,பஞ்சாப் 12 அம்சங்களிலும், கேரளா 11 அம்சங்களிலும் சிறந்து விளங்குவது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், மத்திய அரசின் நிதியை அதிகம் பெற்ற மாநிலங்களான குஜராத் 20 அம்சங்களில் 8ல் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் வெறும் 3 அம்சங்களிலும், பீகார் இரு அம்சங்களில் மட்டுமே சிறந்து விளங்கியுள்ளது.

மக்களின் முடிவுக்கே

இந்த நாளிதழின் செய்தியை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், 'கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சி தான் இது. இப்படியிருக்கும் போது, மத்திய அரசால் சமகல்வி, சமத்துவத்தை எப்படி கொடுக்க முடியும்? இதை நாட்டு மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Sridhar
செப் 09, 2024 14:57

அந்த திட்டத்தை ஒப்புக்கொண்டு அமல் படுத்துபவர்களுக்குத்தான் நிதி கொடுக்கப்படும்ங்கறது பொதுவிதி. அதைக்கூட விட்டுத்தள்ளுங்க. இந்த ஆளு கூற்று படியே உண்மைன்னு வச்சுக்கிட்டாலும், எந்த மாநிலம் பின்தங்கியிருக்கோ அதுக்கு அதிக நிதி கொடுப்பதுதானே சமூகநீதி? முன்னேறிய மாநிலத்துக்கு எதுக்கு மேலும் நிதி கொடுக்கோணும்? ஆளு எங்கே திடீர்னு காணாமப்போயிட்டாரேன்னு யாராவது கேட்டுறப்போறாங்களேங்கற பயத்துல, அட்மின் போட்ட டீவீடா இருக்கும்னு நினைக்கிறேன். டிரீட்மென்ட் முடிஞ்சிச்சா இன்னும் இல்லையா? இன்னும் எதனை நாளைக்கய்யா இந்த முதலீடு ஈர்ப்பு ங்கற வார்த்தைகளையே கேட்டிருக்கிறது?


ஆரூர் ரங்
செப் 09, 2024 14:14

பள்ளிகளிலேயே சரக்கடிக்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் ஆலைகளை நடத்தும் அமைச்சர்களுக்கே லாபம். மற்றவர்களில் பலர் எல்லாவற்றிலும் பேக்கேஜ் போடுகிறார்கள். நிதியை மறுப்பதிலும் நியாயமிருக்கிறது.


ராமகிருஷ்ணன்
செப் 09, 2024 13:58

முழு குடும்ப உறுப்பினர்கள் அக்டோபஸ் கரங்கள் போல சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவதை பார்த்து மத்திய அரசு பயந்து விட்டது. அதனால் நிதி கொடுப்பதிற்கு தயங்குகிறது என்று உண்மையை சொல்லுங்க.


Indian
செப் 09, 2024 13:36

மரியாதையாக பேசு


Hari
செப் 09, 2024 16:11

We don't buy rs 200 like you kailasapuram


Vasu
செப் 09, 2024 13:20

நெல்லை மறை மாவட்டத்திற்கு வருடம் 640 கோடியாமே??. பொது மக்கள் வரி பணத்தில் மைனாரிட்டி கல்விக்கு 640 கோடி. ஆனால் ஒரு மதம் சார்ந்தவர்க்கே வேலை அங்கே, நீதிமன்றமே இந்த கேள்வி கேட்டு விட்டது. இதை சரி செய்யுங்கள். மேலும் GST 70% மாநிலத்திற்கே.


Saai Sundharamurthy AVK
செப் 09, 2024 13:17

மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இதுவரை சமக்ர சிஷா ( SSA ) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பெற்றுள்ள நிதியை பாருங்கள்...! 2019 - 2020 நிதியாண்டில் 1769.12 கோடி ரூபாய். 2020 - 2021 நிதியாண்டில் 1621.23 கோடி ரூபாய். 2021 - 2022 நிதியாண்டில் 1598.52 கோடி ரூபாய். 2022 - 2023 நிதியாண்டில் 2107.23 கோடி ரூபாய். 2023 - 2024 நிதியாண்டில் 1876.15 கோடி ரூபாய்.


sridhar
செப் 09, 2024 13:09

பணம் கொடுத்தால் பெரும்பகுதி சுருட்டிக்கொண்டு மீதியை ரொக்கமாக மாணவிகளுக்கு கொடுப்பீங்க .


C.SRIRAM
செப் 09, 2024 12:56

வரிப்பணத்தை ஊதாரியாக செலவழித்ததாக பொய் கணக்கு காட்டி கொள்ளையடித்துவிட்டு மீண்டும் மீண்டும் மத்திய அரசு ... ஒன்றிய அரசு ... நிதி மறுப்பு என்று தொடர்ந்து பொய் கூறுவது எல்லாருக்கும் தெரியும்


Narayanan
செப் 09, 2024 12:13

உதயநிதியை கேட்க சொல்லுங்கள் உங்கப்பன் வீட்டுக்கு காசா ? ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று . உடனே மத்திய அரசு பயந்து கொடுத்துவிடும் . என்ன பேசுகிறோம் யாரை பேசுகிறோம் என்று விபரம் இல்லாமல் பொது மேடைகளில் , மன்றத்தில் பேசுவீர்கள் . கொடுத்த பணத்தை வேறு வழிகளில் சிலவும் செய்து கணக்கும் கொடுக்க மாட்டீர்கள் . நீங்கள் கேட்ட உடன் பணம் வந்துவிடுமா ?


angbu ganesh
செப் 09, 2024 12:02

வெளிநாட்டுக்கு போய் நிதி திரட்ட போநீங்களே tour போனிங்களே எவ்ளோ செலவு aachu சார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை