உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்

மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: சகோதரர் அழகிரியையும் சந்தித்தார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடந்தது.3: 45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து, டிவிஎஸ் நகரில் உள்ள சகோதரர் அழகிரி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரை சந்தித்து பேசினார். தி.மு.க., மாநில பொதுக்குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடக்கிறது. இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து மாலையில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கி.மீ., தொலைவுக்கு நடக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது.பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ' துவங்கி அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, ஆரப்பாளையம் வரை திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று மக்களை சந்தித்தார். முதல்வர், சாலையில் இறங்கி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். 3: 45 மணி நேரம் நடந்த இந்த ரோடு ஷோவின் போது, ஸ்டாலின் சுமார் 5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டனர்.முன்னாள் மேயர் சிலை திறப்புரோடு ஷோ முடிந்த பிறகு, மதுரையின் முதல் மேயர் முத்துவின் வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.அழகிரி உடன் சந்திப்புஇதனைத் தொடர்ந்து டிவிஎஸ் நகர் சென்ற முதல்வர் ஸ்டாலின், அண்ணன் அழகிரியை சந்தித்து பேசினார். முதல்வராக பதவியேற்ற பிறகு, மதுரையில் அழகிரியை ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், சென்னை சென்ற அழகிரி ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.பந்தல்குடி கால்வாயில் ஆய்வுமுன்னதாக, ஸ்டாலின் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணி வைத்து மறைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அந்த கால்வாயை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

RAMESH
ஜூன் 01, 2025 06:02

மக்களிடம் எடுபடாது


RAMESH
ஜூன் 01, 2025 06:01

அனைத்து மகளிர்க்கு 1000 கொடுக்க திராணி இல்லை...நீட் ரகசியம் அம்பலபடுத்தி ஒழிக்க முடியவில்லை...அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் அமுல்படுத்த முடியவில்லை... அப்பாவி பெண்கள் பாலியல் பலாத்காரம்.... டாஸ்மாக் ஊழல்.... தேர்தலில் தென் மாவட்டங்களில் ஓட்டு பெறவே அழகிரி உறவு.... விஜய் செல்வாக்கு பார்த்து பீதி....தமாசு நடிகரின் ஜோக்ஸ் .....


RAMESH
ஜூன் 01, 2025 06:01

அனைத்து மகளிர்க்கு 1000 கொடுக்க திராணி இல்லை...நீட் ரகசியம் அம்பலபடுத்தி ஒழிக்க முடியவில்லை...அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் அமுல்படுத்த முடியவில்லை... அப்பாவி பெண்கள் பாலியல் பலாத்காரம்.... டாஸ்மாக் ஊழல்.... தேர்தலில் தென் மாவட்டங்களில் ஓட்டு பெறவே அழகிரி உறவு.... விஜய் செல்வாக்கு பார்த்து பீதி....தமாசு நடிகரின் ஜோக்ஸ்


சங்கி
மே 31, 2025 23:19

மோடி ரோடு ஷோவை குறை சொன்ன அனைவருக்கும்....


சங்கி
மே 31, 2025 23:17

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது


V Venkatachalam
மே 31, 2025 22:39

மோடி மட்டும் தான் ரோடு ஷோ நடத்தணுமா? நான் நடத்த கூடாதா?


சோலை பார்த்தி
மே 31, 2025 22:23

ஆளுக்கு ரூபாயாக 300 கூடவே பிரியாணி ஆம்பளை னா கூவாட்டர் எக்ஸ்ட்ரா. இதுல அரசு பேருந்து இலவசமாக... எங்கயும் எப்பவும் அரசு பணத்த கபளிகரம் செய்யும் திராவிஷ மாடல் அரசு.. இன்று மட்டும் மகளிர் விடியல் பேருந்து ல மதுரைக்கு அதிக அளவிலான மகளிர் சென்றது எப்படி


Haja Kuthubdeen
மே 31, 2025 21:17

புதுவிதமான அரசியல் நாடக காட்சி தொடங்கப்பட்டுள்ளது மக்களின் செலவில்.அந்த காலத்தில் புரட்சி தலைவர் வருகிறார் என்றால் வழிநெடுகவும் மக்கள் வழிமேல் விழிவைத்து காத்து இருப்பார்கள்.ஒத்த காசு செலவோ போக்குவரத்து நிறுத்தமோ வாகண அனிவகுப்போ குவார்டர் தலைக்கு 200 எதுமே இருக்காது..இதெல்லாம் பார்த்தவர்களுக்கே விளங்கும்.திமுக தொடங்கி வைத்து விட்டது..இனி தொடர்கதை..இதையெல்லாம் பார்த்து ஏமாந்து நிற்க போவது சம்பந்த பட்டவர்கள்தான் என்பதை காலம் நிரூபிக்கும்.


Sakthi Krishna
ஜூன் 01, 2025 06:37

புதுவிதமான அரசியல் நாடக காட்சி தொடங்கப்பட்டுள்ளது மக்களின் செலவில். அந்த காலத்தில் புரட்சி தலைவர் வருகிறார் என்றால் வழிநெடுகவும் மக்கள் வழிமேல் விழிவைத்து காத்து இருப்பார்கள். ஒத்த காசு செலவோ போக்குவரத்து நிறுத்தமோ வாகண அனிவகுப்போ குவார்டர் தலைக்கு 200 எதுமே இருக்காது. இதெல்லாம் பார்த்தவர்களுக்கே விளங்கும். திமுக தொடங்கி வைத்து விட்டது..இனி தொடர்கதை..இதையெல்லாம் பார்த்து ஏமாந்து நிற்க போவது சம்பந்த பட்டவர்கள்தான் என்பதை காலம் நிரூபிக்கும்.


Shankar
மே 31, 2025 21:12

எல்லாத்துலயும் ஸ்டிக்கர் தானா? சுயமாக எதையும் யோசிச்சி செய்யமாட்டீங்களா?


Ramesh Sargam
மே 31, 2025 20:48

அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் இதெல்லாம் வெறும் ஷோ என்று.


முக்கிய வீடியோ