உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்

முதல்வர் மருந்தகம் நடத்த தலா ரூ.1.50 லட்சம் மானியம்

சென்னை:'முதல்வர் மருந்தகம் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, முதற்கட்டமாக அரசு மானியமாக, தலா, 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது' என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மக்களுக்கு குறைந்த விலையில், ஜெனரிக், பிற வகை மருந்துகள் கிடைக்க, முதல்வர் மருந்தகங்கள், 1,000 இடங்களில் துவக்கப்பட உள்ளன. இதற்காக, தொழில் முனைவோரிடம் இருந்து 638, கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து, 490 என, மொத்தம், 1,128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, முதற்கட்டமாக அரசு மானியமாக, தலா, 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது. முதற் கட்டமாக, தொழில்முனைவோர், கூட்டுறவு சங்க மருந்தாளுநருக்கு, மருந்து இருப்பு பராமரிப்பு, விற்பனை முறை உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மருந்தகம் அமைக்கும் பணிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கையை மேற்பார்வையிட, அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் பதிவாளர் நிலையில் மண்டல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், முதல்வர் மருந்தகம், சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் மருந்தகம் துவக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை