உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்

இன்று அரிட்டாபட்டி செல்கிறார் முதல்வர்

சென்னை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராடிய மக்களை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை அரிட்டாபட்டி செல்கிறார்.மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தனியார் நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராடி வந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.'டங்ஸ்டன் சுரங்கம் கண்டிப்பாக வராது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உறுதி அளித்திருந்தார். அவரது தலைமையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், டில்லியில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.'இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி' என, முதல்வர் ஸ்டாலினும்; 'பா.ஜ., எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி' என, அண்ணாமலை உள்ளிட்டோரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அரிட்டாபட்டி மக்களை சந்திக்க இருப்பதாகவும், அங்கு அவருக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.இச்சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். குடியரசு தினமான இன்று, அரிட்டாபட்டியில் நடக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.முதல்வரை சந்தித்த பின், டங்ஸ்டன் போராட்டக் குழுவைச் சேர்ந்த பழனியாண்டி அளித்த பேட்டி:கிராம மக்கள் ஒன்றுகூடி முடிவு எடுத்து, அமைச்சர் மூர்த்தியிடம் முறையிட்டோம். தான் முதல்வராக இருக்கும் வரை, டங்ஸ்டன் திட்டத்தை வர விட மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்; சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றினார். அதனால், திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், முதல்வர் இன்று அரிட்டாபட்டி செல்ல இருப்பதாகவும், அங்கு அவருக்கு பாராட்டு விழா நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Balaa
ஜன 26, 2025 16:50

அரிட்டாபட்டியில் இருப்பவர்கள் தான் விவசாயிகளா? பரந்தூரில் இருப்பவர்கள் தீவிரவாதிகளா? இரட்டை வேடம். ஏர்போர்ட்ல வருமானம் ஜாஸ்தியோ??


Balaa
ஜன 26, 2025 16:46

இவங்களே நன்றி சொல்ல செட்டப் செய்வார்களாம், இவங்களே பாராட்டு விழாவிற்கு அழைப்பாங்களாம், இவர் போவாராம். என்னடா நடக்குது இங்க. தேனீர் விருந்து புறக்கணிக்க இதுவும் ஒரு சாக்கு. ஆஸ்கருக்கு கடும் போட்டி.


krishna
ஜன 26, 2025 16:34

ENGE ENGE ARITTAPATTI KAATHA SINGAM THURU PIDITHU IRUMBU KARAM ENGE.OOH STICKER OTTA PHOTO SHOOT THARPERUMAI SEYALIL ROMBA BUSY.SUPER.


sridhar
ஜன 26, 2025 15:23

ஸ்டிக்கர் ஒட்டாவா ?


SP
ஜன 26, 2025 14:41

வர வர எல்லா விஷயத்திலேயும் தந்தை கருணாநிதியாரே பரவாயில்லை என்ற நிலையை உருவாக்குகிறார்


எஸ் எஸ்
ஜன 26, 2025 14:14

ஒருவேளை மதுரை திமுகவினர் அரிட்டாபட்டி மக்களை முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வற்புறுத்தி இருப்பார்களோ?


Raghavan
ஜன 26, 2025 13:54

அங்க போய் நாலு அன்னகைகளை வைத்து ஒரு 50 100 பேரை கொண்டுவந்து அவர்களை இவரால் தான் டங்ஸ்டன் திட்டம் நின்றுபோனது போல் கூவச்சொல்லி அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் போட்டால் உடனே எல்லோரும் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு பெரிய போஸ்டர் ஒட்டிவிடுவார்கள். ஸ்டிக்கர் ஓட்டுவதில் கில்லாடிகள் விடியா திராவிடர்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 12:54

ஸ்டிக்கர் பார்சல்


D Natarajan
ஜன 26, 2025 12:13

அடுத்த பயணம் பாரந்தூருக்க எப்ப


ஆரூர் ரங்
ஜன 26, 2025 11:59

உலகிலேயே முதன்முதலாக இங்கு துண்டு சீட்டு உருவான வரலாற்றை பெருமையாக அறிவிக்கலாம்.


சமீபத்திய செய்தி