உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்துக்கு முதல்வர் தந்த மரியாதை!

விஜயகாந்துக்கு முதல்வர் தந்த மரியாதை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கே.விக்னேஷ், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சமீபத்தில், தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். போலித்தனம் இல்லாத, கள்ளம், கபடமற்ற இயல்பான தன் குணத்திற்காகவும், தன்னலம் கருதாத கொடைத் தன்மைக்காகவும், அவர் எவ்வளவு இதயங்களை வென்றுள்ளார் என்பதற்கு, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, கூடிய கூட்டமே சாட்சி.விஜயகாந்த் ஒரு சகாப்தம். அரசியலில் ஒரு மாற்று சக்தியாக, மாபெரும் தலைவராக வளர்ந்தவரை, சில திராவிட கட்சி ஆதரவு ஊடகங்கள், தங்கள் சுயலாபத்திற்காக, அவரது புகழை கெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.அத்துடன், அவரால் எம்.எல்.ஏ., ஆன சிலரே, அவருக்கு எதிராக செயல்பட்டனர். மிகுந்த நம்பிக்கைக்கு உரியோராக இருந்தவர்கள், அவருக்கு எதிரணியில் நின்றபோது, மனம் நொந்தே போய் விட்டார். போதாக்குறைக்கு அவரது உயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரின் மரணமும், அவரை வெகுவாக பாதித்தது.அந்த துயரத்தில் வீழ்ந்தவர், கடைசி வரை எழவே இல்லை. அவருடைய இமேஜை டேமேஜ் செய்ததில், அ.தி.மு.க., - தி.மு.க.,வின் பங்கு அதிகம். அதேபோல், விஜயகாந்த் இரு பெரும் திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியலுக்கு வந்தாலும், அவர் அதிகம் விமர்சித்தது, தி.மு.க.,வையும், அதன் குடும்ப அரசியலையும் தான்.அப்படி இருந்தும், அவரது மரணத்திற்கு சம்பிரதாயத்திற்காக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்லாமல், அந்த மாமனிதரின் இறப்புக்கு, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்.அதோடு மட்டுமல்லாமல், 'விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கும்' என்றும் அறிவித்தார். அனைவரும் அஞ்சலி செலுத்த ஏதுவாக, தீவுத்திடலில் போதிய ஏற்பாடுகள் செய்து, அங்கிருந்து அடக்கம் செய்யப்படும் இடம் வரை நடந்த இறுதி ஊர்வலத்துக்கும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தந்தார்.கடைசியாக, 72 குண்டுகள் முழங்க நடந்த விஜயகாந்தின் இறுதிச் சடங்கிலும்பங்கேற்று மரியாதை செலுத்தி, தான் ஒரு பகுத்தறிவுவாதி மட்டுமல்ல, 'பக்குவ வாதி' என்பதையும் முதல்வர் ஸ்டாலின் நிரூபித்து விட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்து, முதல்வரின் இந்த செயல் நிச்சயம் போற்றப்பட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Matt P
ஜன 05, 2024 08:26

இப்படி பாராட்டிக்கிட்டே இருங்க. இந்த பாராட்டுகளால் தான் கண்ணும் மூக்கும் தெரியாம அலையானுக. அதிலயும் இவரு அப்பர் ஒரு நாள் கூட பாராட்டு இல்லாமல் இருந்திருப்பாரோ என்னவோ . அப்படி இல்லைனா ஒழுங்கான தூங்கியிருக்க மாட்டார்.


vijay
ஜன 05, 2024 00:30

அப்படி எண்டால் ஏன் பீச் இல் இடம் கொடுக்க வில்லை .ஸ்டாலின் அப்பனுக்கு மட்டும் தான் பீச் ல இடம் உண்டோ


sankaranarayanan
ஜன 04, 2024 21:42

தகப்பன் செய்த தவறை பிள்ளைதான் சரிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகி விட்டது உண்மை வெளிவந்தால் மக்களுக்கு எங்கே தவறு நடந்துள்ளது யாரால் எப்போது என்று விளங்கும்


ஆரூர் ரங்
ஜன 04, 2024 18:01

நானும் தெலுங்கு விஜயகாந்தும் தெலுங்கு. எனவே நூறு சதவீத தெலுங்கு வாக்கு வங்கிக்காகத்தான் நாடகமாடுகிறேன்???? .இப்படிக்கு விடியல்.


M Ramachandran
ஜன 04, 2024 17:34

ஒருவரின் மரணத்திற்கு பிறகும் காழ்புணர்ச்சியானது கொள்பவன் (வடிவேலு) எந்த ரகம்


M Ramachandran
ஜன 04, 2024 17:31

பாலு செய்ததை சரி செய்யா நினைக்கிறார் போல


M Ramachandran
ஜன 04, 2024 17:30

அப்பன் செய்த கோளாரய் மகன் சமன் செய்ய நினைக்கிறாரோ என்னமோ


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:42

மனுஷன் நல்ல இருக்கும் பொழுது ஒரு பய ஒட்டு போட மாட்டான். செத்தா தான்யா தலையில தூக்கிட்டு வர்றானுங்க. உங்கள எல்லாம் இன்னும் புரிஞ்சிக்கவே முடியலையேடா..


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:41

நான் தினமலர் தான் படிக்கிறேனா ? இல்லை வேறு பத்திரிக்கை படிக்கிறேனா என்று இரண்டு முறை சரி பார்த்து விட்டேன் இந்த கட்டுரை படித்த பின்பு.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 04, 2024 14:24

திமுக, பாஜக இரண்டு கட்சிகளும் விஜயகாந்தின் தேமுதிக வாக்குகளை பங்கு பிரிப்பதில் கவனமாக இருக்கின்றன. அதன் விளைவுதான் ஸ்டாலின் மற்றும் மோடியின் செயல்கள். சுயநலன் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது, தெரிகிறது. மற்றபடி நினைவிடம், தினமும் அன்ன தானம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இன்னும் சில மாதங்களில் மக்கள் விஜயகாந்தை மறந்துவிடுவர் என்பதுதான் யதார்த்தம். சில ஆண்டுகள் கழித்து நினைவிடம் யாருக்கும் பயன்படாத சோம்பேறி மடமாக மட்டுமே மாறும். அதற்கு பதில் அவரின் வாரிசுகள் இனியாவது மீதம் இருக்கும் சொத்தை பாதுகாத்து கொள்வதே புத்திசாலித்தனம்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ