உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு

சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்' என்ற, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்புக்கு, தமிழக தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:கடந்த நான்கு ஆண்டுகளாக, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில், 'தி.மு.க.,வின் 2021 தேர்தல் வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்' என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார். ஆனால், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பொறுத்தவரை, 100 சதவீதம் எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை.இதுவரை, மத்திய அரசின் குழுவையும், ஆந்திர அரசின் குழுவையும் கைகாட்டி கொண்டிருந்தனர்; அவை வந்து விட்டன. தற்போது, வழிகாட்டு நெறிமுறைகள் வர வேண்டும் என்று கூறுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, எத்தனை குழுக்களை தான் அமைப்பர்?தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை, பொங்கல் பரிசாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். நிதி அமைச்சரின் அறிவிப்பை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை, பட்ஜெட்டில் அறிவிக்க வலியுறுத்தியும், வரும் 24ம் தேதி மதியம் 1:30 மணிக்கு, உணவு இடைவேளை கூட்டம் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜன 12, 2025 07:19

அரசு ஊழியர்கள் கடமைகளை நேர்மையாக செய்யாமல் லஞ்சத்தின் அடிப்படையில் குற்றங்கள் பல செய்தும் கொள்ளை அடித்தும் பணம் சம்பாதிக்கின்றனர்.இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே வீணானது. அப்படி இருக்க ஓய்வு பெற்ற பிறகு அரசுக்கு சேவை செய்ததாக ஓய்வூதியம் கொடுப்பது குற்றவாளிகளை ஊக்குவிப்பதாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை