உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தை கடத்தல் போலி வீடியோ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

குழந்தை கடத்தல் போலி வீடியோ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த சில நாட்களாக, மாணவ - மாணவியர் கடத்தப்படுவது போன்று போலி ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது.இந்த ஆடியோ போலியானது என்றும், இது போன்ற ஆடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்ப செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.வட சென்னையில் எண்ணுார் சரகம், சாத்தாங்காடு காவல் எல்லைக்குட்பட்ட, ஜோதி நகர் பகுதியில், குழந்தைகள் கடத்த முயன்றதாக, பெண்கள் சிலர் பேசிய குரல் பதிவு, வாட்ஸாப் உள்ளிட்ட வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், வடசென்னை முழுதும் பதற்றமான சூழல் நிலவியது.

செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சம்பவ இடத்தில், உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான போலீசார், ஜோதி நகர் ஊர் நிர்வாகிகளுடன் இணைந்து, ஆய்வு செய்தனர். இதில், வாட்ஸாப்பில் பரப்பப்ட்ட செய்தி போலி என்பதும், உண்மைக்கு மாறான செய்தியை அவர் பரப்பி உள்ளார் என்பதும் தெரியவந்தது.இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பரப்பும் பட்சத்தில், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தைரியமாக பள்ளிகளுக்கு அனுப்பலாம், அச்சப்பட தேவையில்லை.தவிர, சமூக விரோத செயல்கள் ஏதும் நடந்தால், போலீசாரின் உதவியை நாடலாம். அதன்படி, செங்குன்றம் துணை கமிஷனர் - பாலகிருஷ்ணன், 94878 71001, எண்ணுார் சரக உதவி கமிஷனர் - வீரகுமார், 98410 10387, சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் - சுதாகர், 86104 77809 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், 100 என்ற போலீஸ் பிரத்யேக எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம். நிச்சயம், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.இதேபோல, மடிப்பாக்கம் புழுதிவாக்கம் உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளிலும் ஆடியோ பரவி பெற்றோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதுபோன்ற வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
பிப் 18, 2024 09:56

காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் 100 அழைத்தால் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா, ஏன் பெருந்தலைகளின் நேரடி எண்ணை கொடுக்க வேண்டும். ஏற்கனவே வதந்தி பரப்பியவர்களை நொங்கெடுத்தார்களா போன்ற தகவல்கள் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 10:12

கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோரின் மொபைல் நம்பர்கள் என்றாலும் அழைப்பை அவர்களே ஏற்க மாட்டார்கள் .....


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 08:56

சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புக்களைத் திருட குழந்தைகள் கடத்தப்படுவது நடக்கத்தான் செய்கிறது ....... பல பத்திரிகை செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளன .....


Ramesh Sargam
பிப் 18, 2024 08:12

இதுபோன்ற இழி செயல்களை எல்லாம் செய்வது வேலை இல்லாமல் சும்மா சரக்கு அடித்து திரியும் கழக கண்மணிகளே. பிடித்து, சரியாக அடித்து, சிறையில் அடைக்கவும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை