உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குழந்தைகள் கடத்தல்

 வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குழந்தைகள் கடத்தல்

சென்னை : வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற, சென்னையைச் சேர்ந்த சகோதரியரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் - கீர்த்தனா தம்பதி, ஈரோடு சித்தோடு பகுதியில், சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் இருக்கும் பாலத்திற்கு கீழே வசித்து வந்தனர். அங்கு, கொசு வலை போர்த்தி துாங்க வைக்கப்பட்டிருந்த இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தையை, மர்ம நபர்கள், நவம்பரில் கடத்தினர். கும்பல் இது தொடர்பாக, சித்தோடு போலீசார், 26 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி, நாமக்கல் மாவட்டத்தில் குழந்தையை மீட்டனர். இக்குழந்தை கடத்தல் தொடர்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ரமேஷ், 45, அவரது இரண்டாவது மனைவி நித்யா, 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணியில், கடத்தல் கும்பல் இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த சகோதரியர் ஷபானா, ரேஷ்மா. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இம்மூவர் தலைமையில், 60 பேர் அடங்கிய கும்பல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, குஜராத் மாநிலம் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து, தமிழகத்திற்கு குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இக்கடத்தல் கும்பலின் முக்கிய நபராக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இக்கும்பலைச் சேர்ந்த, சேலம் ஜானகி, 40, இவரது தங்கை செல்வி, 36, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் பிரவீன், 35, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை இவர்களிடம் இருந்து, பிறந்து, 15 நாட்களே ஆன மற்றும் எட்டு மாத பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளன. இக்குழந்தைகளை வெளிமாநிலங்களில் இருந்து, சென்னை சகோதரியர் ஷபானா, ரேஷ்மா ஆகியோர் உதவியுடன், ரயிலில் தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளை தமிழகத்திற்கு கடத்தி வர புரோக்கர்களுக்கு, 50,000ல் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரை தரப்பட்டுள்ளது. அவ்வாறு கடத்தி வரப்படும் ஆண் குழந்தையை, 4 - 5 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தையை, 3 - 4 லட்சம் ரூபாய்க்கும் விற்க விலை நிர்ணயம் செய்துள்ளனர். பச்சிளம் குழந்தையாக இருந்தால் 'பொம்மை' என்றும், ஆண் குழந்தையாக இருந்தால், 'கால் சட்டை' என்றும், பெண் குழந்தையாக இருந்தால் 'பாவாடை' என்றும், கடத்தலுக்கு பெயரிட்டுள்ளனர். குழந்தைகள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை சகோதரியர் உள்ளிட்டோரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை