உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சியில் தயாரித்த இருமல் மருந்து குடித்து ம.பி., ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு கடிதம்

காஞ்சியில் தயாரித்த இருமல் மருந்து குடித்து ம.பி., ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழப்பு: தமிழக அரசுக்கு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்திருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருந்து தயாரிப்பு கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு, மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதி உள்ளார்.சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டம், ராஜஸ்தான் சீக்கர் மாவட்டத்தில், இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்திய பிரதேசத்தில் ஆறு குழந்தைகளும், ராஜஸ்தானில் ஒரு குழந்தையும் உயிரிழந்தது.இதையடுத்து, மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள், குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவைகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என, தெரியவந்துள்ளது. மேலும், அந்த இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் தினேஷ்குமார் மவுரியா, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், 'சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு கம்பெனி, உங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பதால், இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

D Natarajan
அக் 03, 2025 07:50

விடியல் உடனே அந்த நிறுவனத்தை மூட வேண்டும். மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், தலைமை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்.


GMM
அக் 03, 2025 07:37

ISI, BIS போன்ற தேசிய தரக்கட்டுப்பாடு மருந்துக்கு அவசியம். உலக அளவில் விற்பனை ஆகும் மருந்து மாநில அளவில் கட்டுப்பாடு அதிகாரம் கூடாது. பழைய சட்டங்கள் நீக்க வேண்டும். மாநிலம் அதிக நிர்வாக நிதி ஒதுக்க முடியாது. மாநில மருந்து கட்டுப்பாடு போன்ற ஏராளமான தேவையற்ற துறைகள். நிதி விரயம். இரட்டை அதிகார அமைப்புகள் நீக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் மத்தியப்பிரதேச இயக்குநர் மாநில கவர்னர் வழியே தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதி இருக்க வேண்டும்.


Svs Yaadum oore
அக் 03, 2025 07:14

தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு, வடக்கன் கடிதம் எழுதி உள்ளார் .. இங்கே உள்ளவன் இந்த மருந்தை குடித்து எத்தனை குழந்தைகள் செத்ததோ??


naranam
அக் 03, 2025 06:37

ஏற்கெனவே அமெரிக்காவிலும் வேறு சில நாடுகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் குடித்து மரணங்கள் ஏற்பட்டதாக தகவல் வந்தது. மத்திய மாநில அரசுகள் தரக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஊழல் மற்றும் அலட்சியம் ஆகியவை இத்தகைய தவறுகள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு எதுவாக இருக்கின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திருந்தவில்லை என்றால் அவற்றை இழுத்து மூடிவிடலாம்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 04:47

சமீபத்தில் ம.பி யில் உள்ள அரசு மருத்துவமனையில் எலி கடித்து குழந்தைகள் இறந்து போன சம்பவம் தினமலரில் செய்தியாக வந்தது. இந்த குழந்தைகளையும் சரியா பாக்கணும்.


Kasimani Baskaran
அக் 03, 2025 04:05

ப்ளடி தெக்கன்ஸ் என்று அனைவரும் இதை வைத்து உருட்டாமல் இருக்கவேண்டும். நிறுவனத்தை மூடி சீல் வைத்து ஆய்வு செய்ய வேண்டும்.


rama adhavan
அக் 03, 2025 03:57

மருந்து பெயர் என்ன? காலாவதிக்குள் உள்ளதா? விற்காத மருந்துகளை முடக்க வேண்டும். மருந்து மாதிரிகளை டெஸ்ட் செய்ய வேண்டும். மாதிரி சரி இல்லை எனில் இன் நிறுவனத்தில் தயார் ஆகும் அனைத்து மருந்து மாதிரிகளையும் சோதனை செய்ய வேண்டும். நிறுவனத்தை தற்காலிகமாக மூட வேண்டும். தயாரிப்பாளர் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடுத்த லைசென்ஸ் படி மருந்துக்கள் உள்ளனவா என மருந்து ஆய்வாளர் சரி பார்க்க வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 02:28

SRISUN PHARMA is located at 1ST FLOOR NO 110, CHETTY ST Puducherry, Puducherry, 605001 இந்தியா. Who is the owner of SRISUN PHARMA? The owner of SRISUN PHARMA is பிரபாகரன், செல்வி. கழுவி ஊத்துறதுக்கு முன்னாடி இதை படிச்சிட்டு ஆரம்பிங்க.


ஆரூர் ரங்
அக் 03, 2025 14:53

விசாரித்து எழுதுங்க. முட்டுக் கொடுக்க வேண்டாமே. சென்னைக்கு அருகே காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில்தான் ஆலை உள்ளது. அட்ரெஸ் வேணுமா?. இரண்டு மாதங்களுக்கு முன்பு மருந்துக் கட்டுப்பாட்டு துறை( பொறுப்பு)தலைவரே லஞ்சம் வாங்கி சிக்கிக் கொண்ட சம்பவமும் இதே மாநிலத்தில்தான் நடந்தது. எங்கும் முறைகேடு மயம். இவர்களை நம்பி மருந்து கொள்முதல் செய்யும் மாநில அரசுகளை என்ன சொல்வது?


Ramesh Sargam
அக் 03, 2025 02:04

உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மேலும் அந்த தயாரிப்பாளர்கள் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ள மாநிலத்துக்கு அவப்பெயர் பெற்றுத்தரக்கூடாது. அதிக லாபம் பெறவேண்டும் என்கிற நோக்கில் தரத்தில் கோட்டைவிடக்கூடாது.


Barakat Ali
அக் 02, 2025 23:21

ஏற்கனவே வடக்கன்ஸ் என்று இழிவாகப் பேசிவரும் மாநிலம் ........


முக்கிய வீடியோ