கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-13
ஆசை... ஆசை
டேனியனுக்கு இனிப்பைக் கண்டால் ஆசை. எவ்வளவு தந்தாலும் உடனே காலி செய்துவிடுவார். நாளடைவில் அவருக்கு சர்க்கரை நோய் முற்றி, காலில் புண் வந்தது. எவ்வளவு இன்சுலின் செலுத்தியும் பயனில்லை. கடைசியில் வேறுவழியின்றி கால் விரலை எடுத்தனர். உணவின் மீது உள்ள ஆசையைக் கட்டுப்படுத்தி இருந்தால் ஆபத்து வந்திருக்காது அல்லவா! ஆசையால் அவதிப்படும் மனிதன் திருந்தி வாழ கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்வது அவசியம். * அசுத்தம், மோகம், பொல்லாத ஆசையை கொன்றுபோடுங்கள்.* சோதனையை சகிக்கிறவன் பாக்கியவான். * ஒவ்வொருவரும் அவரவர் இச்சைகளால் இழுக்கப்பட்டு மயக்கப்படும் போது சோதிக்கப்படுகிறார்கள். பின்னர் ஆசை கருவுற்றால் அது பாவத்தைப் பெற்றெடுக்கிறது. * தீங்கு விளைவிக்கும் பல இச்சைகளுக்கு உள்ளாகிறார்கள் மனிதர்கள். * பண ஆசை எல்லாவிதமான தீமைகளுக்கும் ஆணிவேர். * பணத்தை சேர்த்து வைக்காதீர்கள். அதை அந்துப்பூச்சியும் துருவும் அழித்துவிடும். எனவே பரலோகத்திற்கான பொக்கிஷங்களை சேமியுங்கள்.