உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளியூருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள்: பிளாஸ்டிக் இருக்கையால் பயணியர் அவதி

வெளியூருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள்: பிளாஸ்டிக் இருக்கையால் பயணியர் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மற்றும் புறநகருக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுவதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர், தங்கள் சொந்த ஊருக்கும், சுற்றுலா இடங்களுக்கும் சென்று வருகின்றனர். எனவே, பயணியர் வசதிக்காக, வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு,1,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சென்னையில் குறுகிய துாரத்துக்கு இயக்கப்படும் மாநகர பஸ்கள், வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. குறிப்பாக, திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, வேலுார் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இப்பஸ்களில் இருக்கை வசதி சரியாக இல்லாததால், அதில் பயணம் செய்யும் பயணிகள், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது: சென்னையில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும், நீல நிற மாநகர பஸ்களில், குறுகிய அளவிலான இருக்கைகள் உள்ளன. மேலும், அவை பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒரு மணி நேரம் அமர்ந்து பயணம் செய்தாலே, உடல் வலி ஏற்படுகிறது. கூட்ட நெரிசலின் போது, வேறு வழியில்லாமல், இந்த பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.மேலும், இந்த பஸ்கள், அதிக இடங்களில் நின்று செல்கின்றன. ஐந்து, ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்யும் பயணியர், அமர முடியாமல், துாங்க முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'கிளாம்பாக்கத்தில் திடீரென பயணியர் கூட்டம் அதிகமாக வரும்போது, சில நேரங்களில் மட்டும் நீல நிற மாநகர பஸ்களை இயக்குகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
மே 22, 2025 23:02

விடியல்


அப்பாவி
மே 22, 2025 17:43

இதுவே ஜாஸ்தி. ஓசில பெண்களை ஏத்திக்கிட்டு போனா வருமானம் எங்கிருந்து வரும். இறங்கும் போது அந்த சீட்டையும் கொண்டு போயிருங்கோ.


Mohan das GANDHI
மே 22, 2025 14:06

திமுகக்காரன் கோபாலபுரம் கொத்தடிமை அண்ணா அறிவாலயம் contractor திருமாவளவனுக்காக இப்படி பிளாஸ்டிக் நாற்காலிகளை அமைத்திருக்கலாம் திமுக அரசு?


நாஞ்சில் நாடோடி
மே 22, 2025 13:00

விடியல் அரசின் சாதனைகளில் இதுவும் ஓன்று...


Narasimhan
மே 22, 2025 11:16

அதற்குள் விசிக ஆட்சிக்கு வந்துவிட்டதா?


ponssasi
மே 22, 2025 11:05

திருவண்ணாமலை பேருந்துகள் கடந்த இருபது ஆண்டுகளாகவே கூட்டம் நிரம்பி வழியும். போதுமான தரமான பேருந்துகள் விடப்படுவதில்லை. பேருந்து வழித்தடங்களில் அதிக வருவாய் தரக்கூடிய வழித்தடம் தி மலை. வருவாய் குறைந்துவிடும் என்பதிலாலோ என்னவோ சரியான முறையில் ரயில் விடப்படுவதில்லை.


Kjp
மே 22, 2025 09:34

படத்தில் உள்ள பேருந்துகள் டவுன் நகர பேருந்துகளாக இயக்கப் படுகிறது.இதில் உள்ள இருக்கைகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமர முடியாது.இதில் ஆறு மணி நேரம் பயணித்தால் உடம்பு நொந்து நூலாகிய விடும்..


baala
மே 22, 2025 09:21

illai


முருகன்
மே 22, 2025 07:31

இவர்களுக்கு பஸ் விட்டாலும் பிரச்சினை பாஸ் விடா விட்டாலும் பிரச்சினை


சண்முகம்
மே 22, 2025 07:08

பிளாஸ்டிக் இருக்கையா?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 22, 2025 09:56

ஆமாம். நகர பேருந்துகளில் பிளாஸ்டிக் இருக்கைகள் பல பேருந்துகளில் உள்ளன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை