உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டம்

சென்னை:ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தினர், சென்னை எழும்பூரில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, சம்மேளன தலைவர் தமிழரசு கூறியதாவது:தமிழகத்தில், 128 நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் தனித்தனியே நிர்வாகம் செய்யப்படுகிறது. எனவே, 10 - 12 வங்கிகளை ஒன்றிணைத்து, ஒரு மண்டலமாக உருவாக்க வேண்டும். இதனால், நிர்வாக செலவு குறையும். கடந்த, 2022 ஜனவரி முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதன்படி, 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதை கணக்கீடு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளால், 9.75 சதவீதம் தான் ஊதிய உயர்வு கிடைக்கிறது. இதை சரிசெய்ய வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிவோருக்கு, மற்ற வங்கி ஊழியர்களை போல ஓய்வூதியம் வழங்க வேண்டும். வங்கிகளை தரம் பிரிக்காமல், அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், 16 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், மார்ச் 17ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை