உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அக்டோபர் மாதத்தில் பெய்த மழையால் 33% மேல் பாதிக்கப்பட்ட 4,235 எக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக் கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மழையினால், வேளாண் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கும்படியும், கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். அக் 2025 பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்து 33 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 4235 எக்டர் வேளாண் பயிர்களுக்கும், 345 எக்டர் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டார்.டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கு இழப்பீடுகளை கலெக்டர்கள் விரைந்து வழங்கிட வேண்டுமென்று முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்றும், இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்து தரவேண்டும் என்றும் முதல்வர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை