உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தைரியமாக இருங்க; உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தெம்பூட்டிய ஸ்டாலின்

தைரியமாக இருங்க; உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தெம்பூட்டிய ஸ்டாலின்

சென்னை: 'உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.உத்தரகண்டின் ஆதிகைலாஷ் கோவிலுக்கு சென்ற கடலூரை சேர்ந்த பக்தர்கள் 30 பேர், நிலச்சரிவில் சிக்கினர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்டவருடன் தொலை பேசியில் கலந்துரையாடும் காணொளியை சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். சிக்கி உள்ள தமிழர்களுக்கு அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும், தைரியமாக இருக்கும்படியும் போனில் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

நடவடிக்கை

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி என்பவரை தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

C.SRIRAM
செப் 16, 2024 13:51

அசல் போலி திராவிட சினிமாத்தனம் . இவர் போன் செய்திருக்கவிட்டாலும் அங்குள்ள மாநில அரசு உதவியுடன் இங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஏதோ இவர் போன் செய்ததால் மட்டுமே இது நடந்தது போல ஒரு உருட்டு தேவையில்லாது


Matt P
செப் 16, 2024 09:51

அவா போனா என்ன? இவா போனா என்ன ? கடவுள் பக்தியோடு போறாங்க. நிலநடுக்கம் வருவது இயற்கை எங்கே எப்போ வரும்னு கணிக்க முடியாத நிலையில் இருக்கோம். இறைவன் தான் எல்லோரையும் காப்பாற்றணும் என்று நம்புவது தான் சரி.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 08:49

அங்கல்லாம் போறவங்கள்ல அதிகம் பேரு அவாதான் .....


Mani . V
செப் 16, 2024 06:15

தைரியமாக இருங்க. நான் உடனே இளவரசரை அனுப்பி வைக்கிறேன்.


Ramesh Sargam
செப் 15, 2024 21:45

காப்பாற்றுவது மத்திய அரசு. ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுவது திமுக அரசு.


Jysenn
செப் 15, 2024 21:08

ஓ அப்படியா ?


கௌதம்
செப் 15, 2024 19:04

30ஸ்டிக்கர் அடிங்க!!!


அப்பாவி
செப் 15, 2024 18:31

சரியான பிரிவினைகாரர்கள். உத்தரகாண்டில் தெலங்கானா, கேரளாக்காரன் சிக்கினால் ஓகேவா?


Kalyanaraman
செப் 15, 2024 18:18

உக்ரைன் மாணவர்களை மீட்க தமிழக அரசு பஸ் விட்டதுபோல் உத்தரகாண்டில் இருந்து தமிழர்களை மீட்க பஸ் விடப்படுமா? ⁠.⁠ ⁠❛⁠ ⁠ᴗ⁠ ⁠❛⁠.⁠


என்றும் இந்தியன்
செப் 15, 2024 18:09

இதன் உட்கருத்து "நான் இதில் ஈடுபடாததால் நிச்சயம் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்" என்று அர்த்தம் கொள்க


முக்கிய வீடியோ