உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். இதற்கிடையே, பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை , முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிரதமர் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

கவர்னர் ரவி வாழ்த்து

தமிழில் கையெழுத்து போட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக கவர்னர் ரவி எழுதி உள்ள கடிதத்தில், ' தாங்கள் இன்று தங்களுடைய 72ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.காங்., எம்.பி., ராகுல் வாழ்த்துஎன் சகோதரரும், தமிழகத்தின் முதல்வருமான ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து; இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி, அரசியலமைப்பைக் காக்க தொடர்ந்து இணைந்து நிற்போம்.த.வெ.க., தலைவர் விஜய்தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இன்று 72ம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் பிறந்த நாள் முன்னிட்டு, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

நிக்கோல்தாம்சன்
மார் 02, 2025 05:12

யப்பா எதற்க்காக பிறந்தோம் என்று என்றாவது ஒருநாள் யோசித்த்தோமேயானால் அன்று நாம் பிறந்ததற்கு நன்றி சொல்வோம் , இந்த மாதத்தின் 30000 கோடி வந்துவிட்டதா அமைச்சரே ? வந்திருந்தா தமிழக கடனை அதனை வைத்து அடைக்க ஏற்பாடு செய்யவும்


மோகனசுந்தரம் லண்டன்
மார் 02, 2025 02:28

இது என்னடா மோடிக்கு வந்த சோதனை. அயோக்கியர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் கூறுகிறார்


தேச நேசன்
மார் 01, 2025 21:25

தமிழக முதல்வருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து. இது தான் நாகரீகம். எதிர் கட்ச்சியினர் எதிரிகள் அல்ல.


venugopal s
மார் 01, 2025 19:28

வாழ்த்தியதால் மட்டும் வாழ்ந்தோரும் இல்லை,வசவு பொழிந்ததால் மட்டுமே வீழ்ந்தோரும் இல்லை!


என்றும் இந்தியன்
மார் 01, 2025 19:01

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே இங்கு வந்து ஏன் பிறந்தாய் என் துருப்பிடித்த இரும்பு மகனே


பாமரன்
மார் 01, 2025 14:03

சந்தர்ப்பவாத அரசியல்வியாதிகளுக்கும் அதுகளை குருட்டுத்தனமா வெவரந்தெரியாம கொண்டாடும் அடிமைகளுக்கும் மற்றும் கூலிக்கு மாரடிக்கும் ஊடகத்துக்குமான வித்தியாசத்தை இந்த நியூஸ் மற்றும் கருத்துக்கள் மூலம் தெரிஞ்சிக்கலாம்... எதுவும் அரசியலில் நிரந்தரமாக இருக்காதுன்னு வாழ்த்து சொல்லி துண்டை போடும் அரசியல் வியாதிகள்... நாகரிகம் இல்லாமல் எங்கேயும் வசைபாடி கல்லா கட்ட பார்க்கும் அடிமைகள்... இன்றைய எசமானருக்கு விசுவாசமாக சம்பந்தமேயில்லாமல் ஆட்டை டாப்பில் போட்டு வாழ்த்துக்கள் சொன்னதாக மற்றும் எதிரிதரப்பை மட்டுமே வசைபாட அனுமதிக்கும் ஊடகம்... எல்லாத்தையும் இங்கே பார்க்கலாம்... எனிவே ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அட மொறைக்காதீங்க ஆட்டுக்கு பெரிய ஜி க்கு கூட சொன்னேன்... (சந்தடி சாக்கில் ஜிக்கு முன்னாடி ஆடு பேரை போட்டதால கருத்து வரனும்... பார்ப்போம்)


vivek
மார் 01, 2025 20:13

இதோ ஒரு கொத்தடிமை


kumar
மார் 01, 2025 13:45

hashtag பற்றி விஜய் சொன்னது கரெக்ட்டா இருக்கும் போல


எஸ் எஸ்
மார் 01, 2025 13:41

பிஜேபி வெற்றி பெற்றாலோ மோடிக்கு பிறந்தநாளோ ஸ்டாலின் வாழ்த்து சொல்ல மாட்டார்


velan ayyangar, Sydney
மார் 01, 2025 13:20

என்னப்பா ஊ ஃபீஸ் ஒருத்தனும் காணோம்...பட்டுவாடா இல்லையா?


vijai hindu
மார் 01, 2025 13:06

ஒரு கெட்ட நாள்


முக்கிய வீடியோ