உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு வழக்குக்கு 54 மடங்கு கட்டணமா? விழிபிதுங்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்

ஒரு வழக்குக்கு 54 மடங்கு கட்டணமா? விழிபிதுங்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நிலம் கையகப்படுத்துவதில் இழப்பீடு வழங்குவது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் ஒன்றில், எதிர் தரப்பினரின் எண்ணிக்கை அடிப்படையில், வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்க, சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.சென்னையில், வண்டலுார் முதல் மீஞ்சூர் வரை, 62 கி.மீ., தொலைவுக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் பொறுப்பு, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது.இதன்படி, நிலம் கையகப்படுத்த, சி.எம்.டி.ஏ.,வில், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவு நிலம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டது.மீஞ்சூர் கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதில், ஒரு சென்டுக்கு, 65,375 ரூபாய், 66,956 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது. எதை எதிர்த்து, நில உரிமையாளர்கள், 54 பேர், பொன்னேரி கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு சென்டு நிலத்திற்கு, 2.13 லட்ச ரூபாய் சந்தை மதிப்பு என நிர்ணயித்து, இரண்டு மடங்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சி.எம்.டி.ஏ.,வின் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.இந்த வழக்கில், கிளை நீதிமன்ற உத்தரவின் ஒருபகுதியை உயர் நீதிமன்றம் ஏற்று, 2023ல் புதிய உத்தரவை பிறப்பித்தது. இது நிலம் கையகப்படுத்தும் அலுவலர் நிர்ணயித்த தொகையை விட, நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக, சி.எம்.டி.ஏ., கருதியது.வழக்கில் பல்வேறு விஷயங்களை உயர்நீதிமன்றம் கவனிக்கவில்லை என்பதால் இதில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், சி.எம்.டி.ஏ.,வுக்கு கருத்து தெரிவித்தார்.இதன் அடிப்படையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.டி.ஏ., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜி. இந்திரா வாயிலாக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் உத்தரவு எதுவும் வரவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், வழக்கறிஞர் கட்டணத்துக்கான பில், சி.எம்.டி.ஏ.,வுக்கு வந்துள்ளது. அதில், 54 பேர் எதிர்தரப்பினராக இருப்பதால், தலா, 40,000 ரூபாய் என்ற அடிப்படையில், 21.60 லட்ச ரூபாய் கட்டணமாக அவர் கேட்டுள்ளார்.இந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர் தரப்பினர், 54 பேர் இருந்தாலும் ஒரே தொகுப்பாக தான் இந்த வழக்கு நடத்தப்படுகிறது. அப்படி இருக்கும்போது, 54 மடங்கு கட்டணம் கேட்பது நியாயமா என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இதில் கேள்வி எழுப்பினர்.இருப்பினும், இத்தொகையை கொடுப்பதற்கான பணிகளில், சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் வழக்கில் கிளை நீதிமன்றம், உயர் நீதிமன்ற தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக, இவ்வளவு தொகையை செலவு செய்து போராட வேண்டுமா என, நில உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

GMM
ஏப் 21, 2025 12:49

வக்கீல் கட்டணம் 54 மடங்கு என்ன 540 அல்லது 5400 மடங்கு இருந்தாலும் நீதி கோபம் கொள்ளும் முன் உடனடியாக விடுவிக்கவும். ஜனாதிபதி, கவர்னர் பதவியை கௌரவ படுத்த முடியாமல், மத்திய அரசு மண்டியிட உள்ளது? CMDA - ஒரு தூசு மாதிரி. நிலமெடுப்பு ஒரு பங்கு பிரிப்பு. சதுர அடி 1 ரூபாய். வழக்கில் 10000 வாதிட்டு பெற முடியும். நீதிக்கு தலை வணக்கு. திமுக எதிர் தீர்ப்பு என்றால் , திண்டாட்டம் ஆகும்.


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:38

இப்ப எல்லாம் தமிழகத்தில் நிலம் வாங்கவே பயமாக இருக்கிறது.


உண்மை கசக்கும்
ஏப் 21, 2025 11:30

வக்கீல்கள் இரண்டு மட்டைகள் கட்சியாகத்தான் இருக்கும்.


Yes your honor
ஏப் 21, 2025 11:20

யாருக்குத் தெரியும், 60000 கொடுத்துவிட்டு 21 இலட்சத்தை ஆட்டையைக் கூட போடலாம். நடப்பது திராவிட மாடல் ஆட்சி. எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல் என்பது மட்டுமே கொள்கை.


rama adhavan
ஏப் 21, 2025 10:39

தேவை இன்றி வீம்புக்காகவே ஐ ஏ எஸ் தலைமையில் உள்ள அரசு நிறுவனங்களில் அப்பீல் செய்வார்கள். இது என் சொந்த அனுபவம். ஏனெனில் செலவு அவர்களது அல்ல. அரசுடையது. எனவே அரசுக்கு, அரசு நிறுவனத்திற்கு ஆகும் வெட்டி செலவை சம்பந்தப் பட்ட அலுவலர், போர்டு, வக்கீல், அலுவலகத்தின் சட்டப் பிரிவு முதலியவர்களிடம் இருந்து விகிதாச்சார முறையில் அரசு ஜி ஓ போட்டு வாங்க வேண்டும்.


theruvasagan
ஏப் 21, 2025 10:30

வக்கீலுக்கு பீஸ் கொடுக்கப் போறது அவனுக அப்பா வீட்டு பணமா. மக்களோட வரிப்பணம்தானே. ஆறு நெறைய தண்ணி ஓடுது. ஐயா குடி. அம்மா குடி. இப்படி கேளுங்கன்னு வக்கீலுக்கு இவங்களே கூட சொல்லிக் குடுத்திருக்கலாம்.


S. Gopalakrishnan
ஏப் 21, 2025 09:49

எழுந்துப் பிழைகளை தவிர்க்கவும்.


chennai sivakumar
ஏப் 21, 2025 09:40

மற்றவர்களுக்கு இரத்தம். உங்களுக்கு தக்காளி சட்டினியா?


RAAJ68
ஏப் 21, 2025 08:35

சிஎம்டிஏ மக்களிடம் இருந்து கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். பெரிய கட்டுமான கம்பெனிகளிடம் இருந்து இவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


VENKATASUBRAMANIAN
ஏப் 21, 2025 08:05

இதுதான் விஞ்ஞான ஊழல். திராவிட மாடல் ஊழல். அதற்கு நில உரிமையாளர்களுக்கு கஒடுக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை