உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, மதுரையில் மூன்று ஆண்டுகளில் அமலுக்கு வருகிறது மெட்ரோ ரயில் திட்டம் சி.எம்.ஆர்.எல்., மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல்

கோவை, மதுரையில் மூன்று ஆண்டுகளில் அமலுக்கு வருகிறது மெட்ரோ ரயில் திட்டம் சி.எம்.ஆர்.எல்., மேலாண்மை இயக்குனர் சித்திக் தகவல்

கோவை:''கோவையில், 10,740 கோடி, மதுரையில், 11,340 கோடி ரூபாய் செலவில் 'மெட்ரோ ரயில்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் ஆயத்தப் பணி, பிப்ரவரியில் துவங்கும்,'' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கூறினார்.இது தொடர்பாக, கோவையில் அனைத்து அரசு துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த உள்ள திட்டங்களை, அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கினர். 'மெட்ரோ ரயில்' திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனத்தினர் கூறினர். தொழில்துறையினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.அதன் பின், சித்திக் கூறியதாவது:கோவையில், அவிநாசி ரோடு, சத்தி ரோடு என, இரு வழித்தடங்களில், 34.8 கி.மீ., துாரத்துக்கு, 32 நிறுத்தங்களுடன், 'மெட்ரோ ரயில்' திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழக அரசு வாயிலாக மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தோம். மத்திய அரசு கேட்ட கூடுதல் விபரங்கள் வழங்கியுள்ளோம்; மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒப்புதலை எதிர்பார்த்திருக்கிறோம்.கோவையில், 10,740 கோடியிலும், மதுரையில், 11,340 கோடி செலவிலும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு நகரங்களுக்கும் ஒருங்கிணைந்த திட்டமாக சமர்ப்பித்துள்ளோம். மதுரையில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை, 32 கி.மீ., வரை சுரங்கப்பாதையாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது.கோவையில் உயர்மட்ட பாலத்தில், மெட்ரோ ரயில் செல்லும். 30 மீட்டருக்கு ஓரிடத்தில் துாண் அமையும். 'மெட்ரோ' பணிமனை அமைக்க, 40 ஏக்கர் நிலம் தேவை. இரு வழிகளிலும், வழித்தடம் அமைக்க, 25 ஏக்கர் நிலம் தேவைப்படும். மெட்ரோ ரயிலில் மூன்று பெட்டிகள் இருக்கும்; ஒரே சமயத்தில் 700 பேர் பயணிக்கலாம். திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மூன்றரை ஆண்டுகளாகும்.நிலம் கையகப்படுத்துதல், பாதாள சாக்கடை, மின் புதை வடம் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளாகும். முன்கூட்டியே திட்டமிடும் வகையில், தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணி, பிப்ரவரியில் துவக்கப்படும். நிலம் கையகப்படுத்த மார்ச்சுக்குள் நோட்டீஸ் வினியோகிக்க தயாராகி வருகிறோம்; அதற்குள் அனுமதி கிடைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டத்தில், கோவை கலெக்டர் கிராந்திகுமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
டிச 26, 2024 00:43

Dear Siddique , do not goof . Where is money for these projects ? each project needs not less than 10,000 crores . These guys are spreading goody goody feelings with out any truth


SUBREM
டிச 25, 2024 10:06

திராவிட ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்க படும் கோவை.


Muralidharan S
டிச 25, 2024 08:00

கோவையில் அவிநாசி ரோடு, சக்தி ரோடு தவிர மிகவும் நீளமான ரோடு மேட்டுப்பாளையம் ரோடு. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடம். உக்கடம் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள இந்த வழித்தடத்தையும் திட்டத்தில் சேர்த்தால், கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் நகரம் கோவைதான்.. இது, மேலும் தொழில் வளர்ச்சி அடைய வைக்கும்.


SUBREM
டிச 25, 2024 10:03

மிகவும் பொருத்தமான யோசனை. அதிமுக ஆட்சியில் 10 வருடமாக கிடப்பில் போடப்பட்டு இப்போது தான், உருவெடுக்கும் அளவிற்க்கு வந்துள்ளது. கோவையுடன் சேர்த்து கேரளா மாநிலம் கொச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டம், கோவை மெட்ரோ ரயில், கொச்சிக்கு கொண்டுவந்து நிறைவேற்றி விட்டது அங்கு இருக்கும் கொம்முனிச அரசு, கோவை எங்கள் கோட்டை என்று கூறி கொண்ட அதிமுக ஆட்சியின் அலட்சியம் காரணமாக கோவைக்கு இந்த திட்டம் வந்து சேரவே இல்லை. அதிமுக ஆட்சியின் இன்னும் சில அலட்சியங்களாக இங்கு இருக்கும் 100 அடி ரோடு பாலம், அதை நவ இந்தியா வரை நீட்டிப்பு செய்ய எவ்ளவோ முறையிட்டும் நடக்கவில்லை. காந்திபுரம் பாலம், ரௌண்டான அமைக்காமல் பாலம் மீது செல்பவர்களை விட, பாலம் தவிர்த்து செல்பவர்களே அதிகம். அவிநாசி ரோட் பாலம், இன்னும் சற்று வலுவுடன் பில்லர்களை பதித்து இருந்தால் மெட்ரோ ரயில் செல்ல புதிய இடம் கையக படுத்த வேண்டியது இல்லை. தரை மற்றும் முதல் தளம் வாகன போக்கு வரத்தும், இரண்டாம் தளம் மெட்ரோ ரயிலும் செல்ல வழி வகுக்க பட்டு இருக்கும். மேலும் இந்த பாலத்திலும் ரௌண்டான அமைப்பு ஏற்படுத்த படவில்லை, இதனால் அவிநாசி சாலையில் பல இடங்களில் அமைக்க பட்டு உள்ள ஏறுதளம் மற்றும் இறங்கு தளம், அவிநாசி சாலையின் அகலத்தை மிக குறுகளாக்கு கின்றது. சென்னை க்கு அடுத்த இடத்தில் வரி வருவாய் கொடுக்கும் கோவை ஏன் இப்படி எல்லா விதத்திலும் புறக்கணிக்க படுகின்றது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை