கோ - ஆப்டெக்ஸ் ரூ.61 கோடி விற்பனை
சென்னை:கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், நடப்பாண்டு தீபாவளி விற்பனையை அதிகரிக்க, 30 சதவீதம் தள்ளுபடியுடன், புதிய வடிவமைப்பில், 700 ரக சேலைகளை அறிமுகம் செய்தது. இவை, காஞ்சிபுரம், ஆரணி, கோவை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள, விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.அதன் காரணமாக, தீபாவளிக்கு கோ -ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், 61.39 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஆடைகள் விற்பனையாகின. இது கடந்த ஆண்டு, தீபாவளி விற்பனையை விட, 11 கோடி ரூபாய் அதிகம். இதேபோல, இணையதளம் வாயிலாக, கடந்த ஏப்ரல் முதல் இம்மாதம் வரை, 1.27 கோடி ரூபாய்க்கு, ஆடைகள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்தாண்டை விட, 86.75 லட்சம் ரூபாய் அதிகம்.