உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி; அதில் நாங்க இருப்போம்; அடித்து சொல்கிறார் அன்புமணி!

தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி; அதில் நாங்க இருப்போம்; அடித்து சொல்கிறார் அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராணிப்பேட்டை: '2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார்.ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி கூறியதாவது: நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழகத்தில் 2026ம் ஆண்டு கூட்டணி ஆட்சி நடக்கும். கூட்டணியில் பா.ம.க., இருக்கும். கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் இருப்பவர்கள் ஆட்சியில் பங்கு பெறுவார்கள். அனைத்து கட்சிகளும் அடங்கிய கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்யுடன் கூட்டணியா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யுடன் கூட்டணி செல்வீர்களா என்ற கேள்விக்கு, 'இன்னும் ஒரு வருடங்களுக்கும் மேல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்' என அன்புமணி பதில் அளித்தார்.

தியாகி அல்ல !

கோவையில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணி செய்ய செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார். பல தடைகளை அவர் கடந்து வந்துள்ளார் என பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு, 'இதே முதல்வர் தான் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தியாகி அல்ல ஒரு குற்றவாளி என கூறினார். இப்பொழுது ஜாமினில் வெளிய உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஏன் இவ்வளவு பாராட்டு கொடுக்கிறார் என தெரியவில்லை' என அன்புமணி பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mario
நவ 08, 2024 16:59

யாரை அடித்து?


Suppan
நவ 08, 2024 16:39

அதாவது ஆட்சி அமைக்கத் தகுதி பெற்ற கட்சியுடன் பேரம் பேசி ஆட்சியில் பங்கு பெறுவோம் என்கிறாரே


vadivelu
நவ 08, 2024 18:06

அதெல்லாம் அவ்வளவு கரெக்ட்டா கண்டு பிடிக்க மாட்டாங்க.


pmkmember
நவ 08, 2024 16:20

PMK is Selfish family run business. They manipulate and concerned about one caste! When he was holding MP he contested for MLA. That time he was not a minister, so trying to choose what is best for him Now his wife is searching for ministry Hope people teach them lesson


Smba
நவ 08, 2024 15:55

கூட்டனி ஆட்சி இருக்க கூடும் ஆனால் உங்க கட்சி அதில இருக்காது


Pandianpillai Pandi
நவ 08, 2024 15:32

கூட்டணி ஆட்சி அதிகாரத்தின் மூலம் என்ன சாதிக்க முடியும். உங்கள் கட்சி தனித்து செயல்பட கொள்கைகளை நிறைவேற்றிட முடியுமா? மக்களை பிரிக்கின்ற சூழ்ச்சி தான் கூட்டணி ஆட்சி. காலாவதியான கட்சிகள் குரல் தான் கூட்டணி ஆட்சி. ஒருமித்த கொள்கையுடைய ஆட்சியின் மூலம் எல்லா தரப்பு மக்களையும் அரவனைத்து மத்திய அரசின் பாராமுக சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டை சிறப்பாக வழிநடத்தி ஆட்சிபுரியும் தி மு க கூட்டணி தான் அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற போகிறது. தி மு க வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோகிவிட்டார்கள். தி மு க வை நம்பியவர்கள் தங்கள் கட்சியை பலமாக வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்கள். பா ம க கட்சி தி மு க வுடன் இருந்த போது மக்களிடம் இருந்த செல்வாக்கு என்ன தற்போது என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை தாங்கள் ஆராய வேண்டும். கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை விட பா ம க ஒரு பெட்டி கட்சி என்ற கலங்கத்தை முதலில் அகற்றபாருங்கள்.


sundarsvpr
நவ 08, 2024 15:18

இன்றய நிலையில் எதிர் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி கூட்டணி அமைக்கும் சூழ்நிலை இல்லை. தி மு க சிரமத்துடன் சிறிய மெஜாரிட்டியில் ஆட்சியில் அமரும். ஸ்டாலின்கு ரெஸ்ட் தேவை. துணை முதல்வர் முதல்வர் இல்லையென்றால் தி மு க பலம் சட்டமன்றத்தில் கூடும். தி மு க தலைமைக்கு தலைவலி. பி ஜெ பி பலம் கூடினால் திராவிடம் என்ற வார்த்தை தமிழகத்தில் எழாது,


Ms Mahadevan Mahadevan
நவ 08, 2024 15:03

எதையாவது கூட்டணி வைத்து பதவியில் உங்காந்திரணும். அப்பத்தான் நிம்மதியா தூ ங்களாம்.


Ramesh Sargam
நவ 08, 2024 14:03

கூட்டணி இல்லாமல் தனித்துவமாக வெற்றிபெற்று இனி ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க சாத்தியமில்லை.


சமூக நல விருப்பி
நவ 08, 2024 13:54

அரசியலில் யார் எந்த சாக்கடையிலும் குதிக்கலாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இந்த விஷயத்தில் விஜக்கு எதிராக சீமான் பேசுனாலும் நஷ்டம் சீமானுக்கு தான். அதனால் புரிந்து அறிந்து பேசுவது நல்லது. நிச்சயம் சீமானால் 2026 இல்லை ஒரு சீட் கூட பெற முடியாது. அவர் சொன்னதை போல சீமான் விஜக்கு முட்டு கொடுத்தால் ஏதாவது கொஞ்சம் பலன் கிடைக்கலாம். படித்த மக்கள் நாகரிகத்தை தான் விரும்புவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை