உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மாதங்களில் ரூ.24 ஆயிரம் கோடி ஏற்றுமதி; கோவை மாவட்டம் அசத்தல்

10 மாதங்களில் ரூ.24 ஆயிரம் கோடி ஏற்றுமதி; கோவை மாவட்டம் அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கடந்த நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், கோவை மாவட்டம் ரூ.23, 932 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 3.8 சதவீத வளர்ச்சியுடன், சுமார் ரூ.1,000 கோடிக்கு கூடுதலாக ஏற்றுமதி நடந்துள்ளது.மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம், 2024---25ம் நிதியாண்டில் ஏப்., முதல் ஜன., வரையிலான 10 மாதங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த, புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, குஜராத் மாநிலம், ரூ. 8.08 கோடி மதிப்பில், ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 11.66 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மகாராஷ்டிரா ரூ.4.52 லட்சம் கோடியுடன் 2ம் இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 0.03 சதவீதம் குறைவு. தமிழகம், 21.32 சதவீத அபரிமிதான வளர்ச்சி பெற்று, ரூ.3.52 லட்சம் கோடியுடன் 3வது இடத்தில் உள்ளது.

கோவையின் வளர்ச்சி

இதில் கோவை மாவட்டம், ரூ.23, 932 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், யு.ஏ.இ., உள்ளிட்ட நாடுகளுக்கு, அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், 2023--24ம் நிதியாண்டில் ரூ.27,686 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பு ஆண்டு ரூ.1,000 கோடிக்கு அதிகமாக, கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 3.8 சதவீதம் அதிகமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் 'சைனா பிளஸ் ஒன்' நடவடிக்கைகளின் விளைவை, கோவை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருப்பதன் விளைவே இது என, தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வளர்ச்சி என்றில்லாமல், பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. முழு நிதியாண்டில், ஏற்றுமதி மதிப்பு ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கும் என்பதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுதொடர்பாக, ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர், பிரபுதாமோதரன் கூறியதாவது:கோவையின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக, உற்பத்தித் துறை சார்ந்து மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.இந்தச்சூழலில், உற்பத்தித் துறை ஏற்றுமதி குறிப்பாக, 'சைனா பிளஸ் ஒன்' வாய்ப்பால், இன்ஜினீயரிங் மற்றும் ஜவுளித்துறைக்கு ஆர்டர் அதிகரித்து வருவதால், கோவையின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில், உலகத் தரத்திலான சாயமேற்றும் ஆலைகள் கொண்ட தொழிற்பூங்கா அமைந்தால், நூற்பாலைகள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் புது முதலீடுகளை ஈர்த்து, ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியை, மேலும் அதிகரிக்க முடியும்.துணி, பெட்லினன் மற்றும் டவல் போன்ற வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியில் தமிழகம் 21 சதவீத பங்களிப்பையும், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 41 சதவீத பங்களிப்பையும் தருகிறது. கோவைப்பகுதியில் இத்துறை சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தினால், ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதியான பொருட்கள்

கோவையில் இருந்து அதிகபட்சமாக, கியர், கியரிங், பற்சக்கரங்கள், பால்ஸ்க்ரூ, கியர் பாக்ஸ் உள்ளிட்டவை ரூ.1,826 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளன. வால்வுகள், குழாய்களுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவை ரூ.1,545 கோடி; தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான வால்வுகள் ரூ.1,390 கோடி; தென்னை நார் ரூ.934 கோடி; பெட்ஷீட் மற்றும் பெட் கவர்கள் ரூ.447 கோடி, டி ஷர்ட் ரூ.420 கோடி, ஆக்டிவேட்டட் கார்பன் ரூ.381 கோடி, இயந்திர உதிரிபாகங்கள் ரூ.377 கோடி, தங்க ஆபரணங்கள் ரூ.363 கோடிக்கும் ஏற்றுமதியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishna Murthy A
மே 06, 2025 23:01

கோவையில் இருந்து எவ்வளவு வரி வருவாய் கிடைத்தாலும் ஆளும் தரப்பு கோவைக்கு விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மழை நீர் வடிகால் , ஐஐடி ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனம், புறவழி சாலைகள் என்று எந்த உருப்படியான திட்டமும் செயல்படுத்துவது இல்லை இங்கு அள்ளி எடுத்து கிள்ளி கொடுப்பதே கடந்த 30 ஆண்டுகளில் நிலமை. விமான நிலையத்தில் உட்கார இடமில்லை வாகனத்துக்கு 20 ரூபாய் கொள்ளை, இரயில் நிலைய விரிவாக்கம் இல்லை, மத்திய அரசு மருத்துவமனை இல்லை, மாநில அரசு மருத்துவமனை சரியில்லை அதனால் தனியார் மருத்துவ கொள்ளை, புறவழி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை இல்லாத ஒரே பகுதி கோவை நீலாம்பூர் புறவழி சாலை இந்திய அளவில் அதிக சாலை விபத்து நடக்கும் பகுதி, என்ற பெருமை, கோவை பாலக்காடு சாலையில் 11 அடி அகலம் மட்டுமே உள்ள மரப்பாலம் ரயில் பாலம் விரிவாக்கம் 30 ஆண்டுகளாக தாமதம்.


பாமரன்
மே 06, 2025 08:40

இந்த நிலை இன்னும் மாறும்... மகாராஷ்டிரா தனி கேஸ்... குஜராத் வருங்காலத்தில் இன்னும் கஷ்டப்படும்... காரணம் அங்கிருந்து ஏற்றுமதி ஆவது கிட்டத்தட்ட அறுபது சதவீத அளவுக்கு வேல்யூ பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள்.. இவை இரண்டும் உலக நுகர்வில் வேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மாறாக தமிழ் நாடு உற்பத்தி பொருளாதாரம்... ஒரு மார்க்கெட் அல்லது ப்ராடெக்ட் இல்லன்னா இன்னொன்னுக்கு மாறும் ஃப்ளெக்சிபிலிட்டி கொண்டது... வளர்ச்சி நிலையாக இருக்கும்.. தமிழ் நாடு பற்றிய பாசிட்டிவ் நியூஸ் மலரில் வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது... பார்ப்போம்


raja
மே 06, 2025 08:09

இப்போ வருவான் பாரு ஸ்டிக்கர் ஒட்டும் திலகனும் அவனின் ரூவா இரநூறு சொம்புகளும்.. தான் தான் நம்பர் ஒன்னு .. என்னால தான் இது மற்றும் மாடல் அரசு மண்ணாகட்டி அரசு என்று...


Raja k
மே 06, 2025 07:53

விடியாத இந்த திராவிட ஆட்சியில் இப்படி தான் நடக்கும்,


பாமரன்
மே 06, 2025 08:34

ஏலே தீவட்டி...நியுஸ் ஒழுங்கா படிலே...இந்தியா ஃபெயில் ஆனப்ப தமிழ் நாடு அதுவும் கோவை டிஸ்டிங்ஷன் வாங்கினதா வந்திருக்கும். சொம்மா ஒரு டெம்ப்ளேட் தூக்கிட்டு அலையற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை