உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

கோவை மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவரையும் வரும், 19ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தின் பின்புறம், கடந்த 2ம் தேதி இரவு, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, துாரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, என்பது தெரியவந்தது. கடந்த 3ம் தேதி இரவு, மூவரும் துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்தபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும் இதே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், இன்று( நவ.,11) இரவு மருத்துவமனைக்கு வந்த ஜே.எம்., 2 நீதிபதி அப்துல் ரகுமான், மாணவியை சந்தித்து உடல்நிலையை கேட்டறிந்தார். அதன் பின், மூன்று குற்றவாளிகளை சந்தித்து, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார். மூவரையும் வரும், 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj
நவ 06, 2025 10:24

இந்த கயவர்களை நமது நீதிமன்றம் பெயில் கொடுத்து வெளியே அனுப்பிவிடும். மீண்டும் இதை தான் செய்வார்கள் தைரியத்துடன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் அல்லது கொலை குற்றவாளிகளுக்கு சிறையை பாதாள குழியில் வைத்து கடுமையான தண்டனை கொடுங்கள். இது போல குற்றவாளிகள் பூமியில் இருந்து ஒரு பயனும் இல்லை.


Thirumal Kumaresan
நவ 06, 2025 09:36

ஒரு சட்டமும் பாய வேண்டாம். நடுவெளியில் தண்டனை வழங்கப்பட வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாம். அவர்கள் வாழ்ந்து நாட்டுக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை. எவனுகளுக்கு தண்டனை வழங்கினால் மரண தண்டனை மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள்


Barakat Ali
நவ 06, 2025 07:55

குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லிவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ....


மொட்டை தாசன்...
நவ 06, 2025 07:37

வழக்கம் போல் வாய்தா மேல் வாய்தா மற்றும் மேல்முறையிடு என்று நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆதரவாக இல்லாமல் விரைவில் விசாரித்து கடுமையான தண்டனை வழங்கும் என நம்புவோமாக .


Mani . V
நவ 06, 2025 06:21

தம்பிகளா அடித்துக் கூடக் கேட்பார்கள். மாவுக்கட்டு போட்டுக் கூடக் கேட்பார்கள். இருந்தாலும் இதற்குப் பின்னால் "சார்" போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2025 05:18

வேதனையடைந்துள்ள அந்த மாணவியை மீண்டும் மீண்டும் துன்புறுத்தாதீர்கள்


Kasimani Baskaran
நவ 06, 2025 04:05

மூன்று பேரையும் காலில் மட்டுமே சுட்டுப்பிடித்தோம் என்று சொல்வது நாடகமோ என்ற சந்தேகம் வருகிறது. காவலர் மீது கை வெட்டு விழுந்த பின்னும் பொறுமையாக அகிம்சை வழியில் காலில் மட்டும் சரியாக சுட்டார்கள் என்பது ஜேம்ஸ் பாண்டு படத்தில் வருவது போல இருக்கிறது.. எதற்கும் நீதிமன்றம் எக்ஸ் ரே எடுத்து சரிபார்த்துக்கொள்வது நல்லது. அண்ணா பல்கலை விவாகரத்தில் இதே போல சார் சொன்னவுடன் சரியாக சுட்டார்கள்.


Srinivasan Narasimhan
நவ 06, 2025 03:59

அப்பாவின் ஆட்சி


Ramesh Sargam
நவ 06, 2025 00:15

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? என்று கிடைக்கும்? அல்லது சாட்சிகள் போதவில்லை என்று குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்குமா?


Rahim
நவ 06, 2025 09:49

செய்தாலும் செய்வார்கள் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பலாத்கார வழக்கிலும் சரி சென்னை சிறுமி ஹாஷினி கொலை வழக்கிலும் சரி நீதிபதிகள் மனசாட்சி மறந்து அந்த மிருகங்களை விடுதலை செய்ததை மறக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை