உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம் 

அரவிந்தர் பிறந்த நாளையொட்டி ஆரோவில்லில் கூட்டு தியானம் 

வானுார்:அரவிந்தர் பிறந்த நாளையொட்டி, ஆரோவில்லில் வசிப்பவர்கள், போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மனித ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து, முதன் முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துக் களில் இருந்து தோன்றியது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி, புதுச்சேரியில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கியது. இந்நகரம் உருவா வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த அரவிந்தரின் பிறந்தநாள், ஆரோ வில்லில் நேற்று கொண்டாடப்பட்டது. இங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளானோர் மாத்திரி மந்திர் அருகில் அமைந்து உள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, போன் பயர் ஏற்றி, தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானம் 6:15 மணிக்கு முடி வடைந்தது. தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. போன் பயர் தீப்பிழம்பின் பின் னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை