உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதம் மாறப்போவதாக கல்லுாரி மாணவர் மாயம்

மதம் மாறப்போவதாக கல்லுாரி மாணவர் மாயம்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த அரசு கல்லூரி மாணவர் மாரிகண்ணன் 19, வேறு மதத்தில் சேரப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிள்ளையார்குளத்தை சேர்ந்த பாலமுருகன், சந்தனமாரி தம்பதியின் மகன் மாரிக்கண்ணன். இவர் அங்குள்ள அரசு கலைக் கல்லுாரியில் பி.எஸ்.சி., கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன் தினம் இரவு தான் வேறு மதத்தில் சேர போவதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமானார்.இந்நிலையில் மாரிக்கண்ணன் அவரது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நம்பருக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசிய போது தன்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு, மாரிகண்ணன் தொடர்பை துண்டித்துள்ளார்.வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை