உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் வண்ண மீன் வர்த்தக மையம் திறப்பு

சென்னையில் வண்ண மீன் வர்த்தக மையம் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை, கொளத்துாரில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை, கொளத்துாரில் சி.எம்.டி.ஏ.,வின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, வண்ணமீன் வர்த்தக மையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, பாடி மேம்பாலம் அருகில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு, 53 கோடி ரூபாயில் வண்ண மீன் வர்த்தக மையம் கட்ட, 2024 ஆக., 26ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் ஓராண்டில், இங்கு மூன்று தளங்கள் கொண்ட வர்த்தக மையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வளாகத்தில், 185 கடைகள், ஆய்வகங்கள், உணவகங்கள், பார்வையாளர் கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய வளாகம் இங்கு கட்டப்டட்டுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த வளாகத்தை திறந்து வைத்து, கடை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mani S mani
அக் 13, 2025 18:05

கோமாளி கையில் கிடைத்த பூமாலை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கம் இடத்திற்கு ஒரு தகர கொட்டாய் போட வக்கில்லை நெல் மூட்டைகள் முளைத்து விதை நெல் லாகின் விடுகிறது கலர் மீன் விற்பனை செய்ய மாடி மாடியில்யாய் பில்டிங் தேவையா


VENKATASUBRAMANIAN
அக் 12, 2025 08:20

இதுதான் நாட்டிற்கு மிகவும் அவசியம். சாலை வசதி குடிநீர் வசதி இல்லாமல் எவ்வளவோ மக்கள் உள்ளனர அவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்கும் அரசு. மக்கள் என்று புரிந்து கொள்வார்களோ.


கோமாளி
அக் 12, 2025 06:30

உள்ளூர் மீன்களை அழித்துவிட்டு, வெளிநாட்டு வண்ண மீன் இறக்குமதி. இந்த அரசாங்கம் மக்களின் துன்பம்.


Kasimani Baskaran
அக் 12, 2025 06:20

வண்ண மீன் வளர்த்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் போல தெரிகிறது. வண்ண மீன் வர்த்தகத்தில் ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உடன்பிறப்புக்கள் குதூகலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை